பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைக் குறிப்பிடாமலும் விட்டிருக்கிறேன்; பலரை குறிப்பிட்டு இருக்கிறேன். ரசக் குறைவு தரக்கூடிய விஷயங்களைக் கூடியவரை விலக்கி, ரச நிறைவு கொண்ட விஷயங்களையே பெரும்பாலும் எழுதியிருக்கிறேன். சில விஷயங்களை எழுதியிருக்க வேண்டாமே என்று சிலருக்கு நினைக்கத் தோன்றும். எனினும் புதுமைப்பித்தனது சரிதம் சோனிப் பிறவியாக இல்லாமல் நிறைமாசக் குழந்தைப் பிறப்பின் வனப்போடு விளங்க வேண்டுமென்றால், சில விஷயங்களைக் குறிப்பிடத்தான் வேண்டும். புதுமைப்பித்தன் இன்று இல்லை, எனவே யாரும் இந்த நூலிலுள்ள அந்தச் சில விஷயங்களைப் பொருட்படுத்திப் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந் நூலை எழுதி முடிப்பதற்கு எனக்கு உதவிய நண் பர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் முதலியோர் பலர், ராமனுக்கு உதவிய அணிலைப்போலவும், அனுமனைப் போலவும் சிறிதும் பெரிதுமாக எனக்கு அவர்கள் உதவினார்கள். அவர்கள். அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக - இந்நூலை எழுதி முடிப்பதற்கு எனக்குப் பெருந்துணை செய்து ஒத்துழைத்த புதுமைப்பித்தனின், மனைவி கமலாம்பாள், திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம், புதுமைப் பித்தனின் தந்தை சொக்கலிங்கம்பிள்ளை முதலியோருக்கு என் நன்றியையும், வந்தனத்தையும் கூறக் கடமைப்பட்டிருக் கிறேன். செப்டம்பர் 1$51. ரகுநாதன்