பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புதுமைப்பித்தன் போன்ற ஆட்கொல்லி வியாதிகள் பற்றுவது சுலபம். புதுமைப்பித்தன் நல்ல சாப்பாடும் நல்ல தூக்கமும் ஓய்வும் பெற்று, உடம்பைக் கவனித்திருந்தால் அவரை நோய் அணுகாமல் போயிருக்கலாம். ஆனால் பர்வதகுமாரியோ இவரது பணத்தை மட்டும் உறிஞ்சினாள் என்று சொல்ல" முடியாது; 'ரத்தத்தையே , உறிஞ்சினாள். கைப்பணம் கரைந்தது; சாப்பாட்டுக்குக்கூடத் திண்டாட்டம்; ' பல நேரம் பட்டினி; எனினும் பட்டினியை வெளியில் காட்டிக் கொள்ள முடியாத, கடன் வாங்கக் கை நீளாத அந்தஸ்து; அதாவது ' சொந்தப்படம் எடுக்கும் முதலாளி அவதாரம்; அந்த அவதாரத்தைப் பரிபூரணமாக்குவதற்காக, படம் எடுக்கப் பணம் சேகரிப்பதற்காக, ஊர் ஊராய் வெட்டி அலைச்சல்; அலைந்தும் வெற்றி கிட்டாத்தால் ஏற்படும்: சோர்வு; விரக்தி; இதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல்; தூக்கமின்மை - இத்தியாதிச் சூழ்நிலைக்கு ஆளான புதுமைப் பித்தனின் உடலும் உள்ளமும் ஒடிந்து போனதில் ஆச்சரிய மில்லை. பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் புதுமைப்பித்தனுக்குப் பணத்துக்கு வகை செய்யாவிட்டாலும், , நோய்க்குப் பாதை வகுத்துக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ) எனவே புனா நகரத்துக்குச் சென்றபோது புதுமைப் பித்தனின் உடல்நிலை - மிகவும் நொம்பலப்பட்டுப் போயிருந் தது: , உடலின் பலவீனத்தைப் பயன் படுத்திக் கொண்டு நோய் ஆட்சி செலுத்தத் தொடங்கி விட்டது. மேலும் புதுமைப்பித்தனுக்குப் புனாவில் ஓயாத ஒழியாத உழைப்பு; சரியான கவனிப்பும் இல்லை; சரியான உணவும் இல்லை. எனவே நீறுபூத்த நெருப்புப்போல் உள்ளுக்குள் என்றே குடிகொண்டிருந்த நோய் அவரை ஆட்டியெடுக்கத் தொடங்கி விட்டது. மரண தேவனின் கர்ப்பக் கிருஹ வாச லுக்குள் அடியெடுத்து வைத்துவிட்ட பிறகும், இனித் தனக்கும் வாழ்நாள் அதிகமில்லை என்று உணர்ந்துவிட்ட காலத்திலும், அவர் உழைத்தார். : ஆனால், அவர் க. ராஜ முக்தி ' க்கான வசனத்தை முழுதும் எழுதி முடிப்பதற்குள் க்ஷயரோகம் அவரை முழுதும் ஆட்கொண்டு விட்டது. எனவே புதுமைப்பித்தன் உடல் நிலை காரணமாக ஊருக்குத் திரும்பும்படி நேர்ந்தது.