பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் பதிப்பாக மாற்றி புதுமைப்பித்தன் அமரராகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அவர் அமரரான பின் மூன்றாண்டுகளில் எழுதி வெளியிடப்பட்ட வரலாற்று நூல் இது. இந்த நூலின் முதற் பதிப்பு வெளிவந்தபின் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள புதுமைப்பித்தனின் சம காலத்தவர் . பலரது வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் பலர் இன்று நம் மிடையிலும் இல்லை. என்றாலும் இந்த மாற்றங்களுக்கேற்ப நான் இந்நூலை எவ்விதத்திலும் திருத்தி எழுதவில்லை. காரணம் இந்த நூல். புதுமைப்பித்தனைப் பற்றிய வரலாறுதான்; மற்ற வர்களைப் பற்றியதல்ல. புதுமைப்பித்தன் பூத உடம்மை நீத்துப் புகழுடம்பை எய்தி விட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி யைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கை யையும், அவரது ஆயுட்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், அன்றைய தமிழ் இலக்கிய . உலக நிலைமையையும் எடுத்துக் கூறும் முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டது. இந்த முயற் சியில் இந்நூல் வெற்றி பெற்று, இன்றும் அந்த எழுத்தாள் ரையும் அவரது காலச் சூழ்நிலையையும் தக்க முறையில் இனம் காட்டி நிற்கிறது என்பதற்கு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களை ஆராயப் புகும் ஆசிரியர்கள் எவரும், இந்த நூலை மறக்கவோ, இதன் சிறப்பைப் பாராட்ட மறுக்கவோ முனையவில்லை என்பதே சான்றாகும். மேலும், புதுமைப்பித்தனைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் 31. 7ாவரும் இந்நூலின் பகுதிகளை" அத்தாட்சியாக மேற்கோள் காட்டுவதையும் நான் காண்கிறேன். இவை யாவும் இதன் ஆசிரியரான எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பன வாகும். .