பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 18 புதுமைப்பித்தனுக்கென்ன? நல்ல சான்ஸ். பாகி விதர் படத்துக்கு எழுதப் போயிருக்கிறார். இனி என்ன கவலை?" என்று எழுத்தான நண்பர்கள் பேசிக்கொண் டார்கள். பாகவதர் உனக்குப் பத்தாயிரம் கொடுத்ததாகக் கேள்வி, அதை ஏதாவது நிலத்தில் போடு என்று புது மைப்பித்தனுக்குக் கடிதம் எழுதினர், அவரது சித்தப்பா. “அவன்? கிடைத்த பணத்தைப் பெண்டாட்டி வீட்டில் கொண்டு போய்க் கொடுத்திருப்பான், நிலமாவது, வயலா லது?" என்று அவரது உறவினர்கள் சலித்துக் கொண் ஆனால் 1943-ம் வருஷம், மே மாதம் முதல் வாசத்தில் திருவனந்தபுரம் ஸ்டேஷனில் வந்திறங்கிய புதுமைப்பித்தன் சம்பாதித்துக்கொண்டு வந்தது காசல்ல; காச நோய்! இந்த நிலைமை ஏன் என்பது 24லருக்குப் புரியாத புதிராக இருக்க லாம். புதிரை விடுவிப்பதற்கு நான் விரும்பவில்லை. ஆனால்.. திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்த புதுமைப்பித்தனின் உண்மையான நிலை என்ன என்பதைப் பின்வரும் கடிதமே காட்டும். யாழ்ப்பாணம் 'ஈழகேசரி' பத்திரிகை ஆசிரியரான ராஜ அரியரத்தினம் புதுமைப்பித்தனிடமும் தமிழ் இலக் கியz கர்த்தாக்களிடமும் பேரன்பு கொண்டவர். தமிழிடம் அவர் காட்டும் ஆர்வத்தைவிட, தமிழன்பர்களிடம் அவர்