பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதுமைப்பித்தன் எனக்கு உதவி தேடு, என் நிலையைப் பற்றி நானே வேண்டும் மானாலும் எழுதித் தருகிறேன்... இதுவே அவர் அனுப்பியிருந்த செய் தி; கட்டளை, எண்ணற்ற சிறுகதைகளையும், சிறந்த கட்டுரைகளை பும், அருமையான கவிதைகளையும் எழுதி எழுதிக் குவித் தும் சலியாத புதுமைப்பித்தனால் தமது அந்திம காலத்தில் ஒரு வரி கூட எழுத முடியவில்லை; அதாவது, அவராக இருந்து - 51துவும் எழுதக் கூடவில்லை. அவரது அந்திம காலத்தின் கடிதங்கள் எல்லாம் அவர்தம் கைப்பட எLp தியவையல்ல; யாரையோ விட்டு எழுதச் சொல்லி, அவர் கையெழுத்து மட்டும்தான் போட்டிருந்தார். எனவே புதுமைப்பித்தனின் அந்திம தசையில் இருந்த அவரது உடலின் பலவீனத்துக்கும், நிதி நிலைமையின் பலவீனத் துக்கும் இந்தக் கடிதங்களே தகுந்த அத்தாட்சிகள், புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்த போது அவருக்குத் துணை அவரது மனைவி, மகள், உற வினர்கள் தாம்; திருவனந்தபுரத்து நண்பர் சிதம்பரம் புதுமைப்பித்தனின் அந்திம காலத்தில், அவர் சாகும்வரை உடன் இருந்தவர். அவர் பெற்றது - பாக்கியமா, துர்ப்பாக் கிய (Br" 'என்பது பார்க்கின்ற கோணத்தைப் பொறுத்தது. திருவனந்தபுரம் சிதம்பரம் புதுமைப்பித்தனிடம் பெரு மதிப்புக் கொண்டவர். புதுமையான ' 'இலக்கியங்களில் விருப்புக் கொள்பவர். அவரது இலக்கிய ஆர்வத்தின் பயனாகி 'கவிக்குயில்' என்ற பெயரில் இரண்டு வருஷ கா)மரன், , இரு இலக்கிய மலர்களை வெளியிட்டார். அவரும் எழுதி வந்திருக்கிறார். புதுமைப்பித்தனின், அந்திம காலத்தைப் பற்றி " அவரும், புதுமைப்பித்தனின் மனைவி கமலாம்பாளும் தெரிவித்த செய்திகளை இன்று நினைத்தா லும் ., மனம் நடுங்குகிறது; ஒரு நிலைப்பட மறுக் புதுமைப்பித்தன் ஏற்கெனவே மிகவும் நோஞ்சான் பிறவி; ஒல்லியாகக் குச்சி போலத்தான் இருப்பார், அதிலும் உடலை உருக்கிக் ' கரைக்கும் க்ஷயரோகமும் பிடித்துக்