பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திம காலம் 35} கொண்டால், அவரது உடல் இன்னும் எப்படிக் கரைய முடியும் என்பதைக் " கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. விறகுக் கட்டைபோல் முண்டும் முடிச்சுமாக வெளியே துருத்தித் தோன்றிய எலும்புக் கூட்டம்தான் மிச்சம்,

  • என்பு தோல் போர்த்த உடம்பு' என்பார்களே, அது

வார்த்தைக்கு வார்த்தை உண்மை. அதில் சதைக்கு இடமே கிடையாது. தாடி வளர்ந்து முகத்தை விகார மாக்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் மேலாக ரத்தத்தையும் கபத்தையும் உதைத்து வெளித் தள்ளும் ஓயாத இருமல்; ரோகத்தின் கொடுமையால் உண்டாகும் ஜூரம். புதுமைப்பித்தன் வீடு வந்து சேர்ந்தார். நடக்க இய லாமல் கம்பூன்றி நடந்து கொண்டு ரயிலைவிட்டு இறங்கி னார். கைத்தாங்கலாகத்தான் . அவரை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க முடிந்தது. சுற்றி இருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூட அவருக்குத் திராணியில்லை, பேசுவதற்கு வாய் அசைந்தது; வார்த்தை அசையவில்லை. வீட்டுக்குள் வந்து ஒரு தம்ளர் காப்பி சாப்பிட்டார்; காப்பி சாப்பிட்ட தெம்பில் அவர் பேசியது இதுதான்: இன்னைக்குத் தாண்டா நல்ல காப்பி கிடைச் சிது. பிறகு மெளனம். அவர் வந்து சேர்ந்த மறு நாள் நண்பர் சிதம்பரம் அவரைப் பார்க்கச் சென்றிருந்தார், புதுமைப்பித்தனின் தேக நிலையைக்கண்டதும் அவருக்குத் தூக்கிவாரிப் போட் டது. அந்த ஆச்சரியத்தில் அவர் கேட்டது இதுதான்!"

  • உடம்பு இப்படி இருக்கையில் இவ்வளவு தூரம் எப்படி

வந்தீர்கள்? புதுமைப்பித்தன் சிரித்துக்கொண்டே சொன்னார்:

  • 'எல்லாத்துக்கும் துணிஞ்சிதான் வந்தேன். உணர்ச்சி

தானப்பா காரணம், அதோ நிற்கிறாளே அவ நினைப்பு தான் {தினகரியின் ஞாபகம்) என்னை இங்கே இழுத்து வந்தது என்று கூறிவிட்டுத் தினகரியைப் பக்கத்தில் அழைத்து அவள் தலையை அருமையோடு தடவிக் கொடுத்