பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் தார்; பிறகு, என்னைப்போல் இருக்கிறவன் எல்லாம் உணர்ச்சிப் பெருக்கால் காரியத்தைச் செய்றது. அபாயத் தையோ உணர்வதில்லை. பிறகு அதன் பலாபலன்களை அனு-1 வீத்து வருகிறது. சரிதானேப்பா? என்று கேட்டார். புது மைப்பித்தன் திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்த போதே அவருக்குத் தம் வாழ்வில் நம்பிக்கை மற்றும் போய்விட்டது. ஆனால் சுற்றியுள்ளவர்களோ ' எப்படியும் வைத்தியம் செய்து குணமாக்கி விட வேண்டும் என்று முயன்றார்கள். வந்தவுடனேயே டாக்டரைப் , . பார்த் தார்கள். நோய் முற்றிவிட்டது. நாகர்கோயில் போய்ப் பாருங்கள்” என்று கையை விரித்துவிட்டார் டாக்டர்.

  • நாகர்கோயிலுக்குப் போவதைவிட, பெங்களூர் நல்லது"

என்று சிலர் அபிப்பிராயம் சொன்னார்கள். பெங்களூர் வைத்தியரோ ஆங் கில் வைத்திய முறையில் அவரைக் குணமாக்கும் சக்தி கிடையாதென்றும், பேசாமல் ஊர் திரும்பி ஓய்வு - 'எடுத்துக் கொள்வதைத் தவிr வேறு மார்க்கம் இல்லை என்றும் கூறிவிட்டார். புதுமைப்பித்தன் மீண்டும் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். மரணம் நெருங்கி விட்டது என்ப 636) தப் புதுமைப்பித் தன் உணரத் தொடங்கிவிட்டார். ஆனால் , புதுமைப்பித் தன் தமிழாக்கி எழுதியிருக்கிறாரே, அமெரிக்க ஆசிரியர் ஜாக் லண்டனின் 'உயிராசை' என்ற கதை, அதில் காணும் உயிராசையைப் - போலத்தான் அவரது , மன நிலை இருந்தது. சாவதில் துன்பமில்லை; வாழ்வதில்தான் துன்பு மிருக்கிறது. எனினும் மனிதன் வாழத்தான் விரும்புகிறான்! புதுமைப்பித்தன் வாழத்தான் விரும்பினார். ' . எனவே பெங்களூரிலிருந்து திரும்பி வந்தவுடன் ஆயுர்வேதச் சிகிச்சை செய்து கொள்ள ஆரம்பித்தார், புதுமைப்பித்தனை அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார் சிதம்பரம், அவர் ஒரு நாள் போனபோது அங்கு புதுமைப் பித்தனுக்குச் சந்தனக்கல்லில் ஏதோ மருந்து அரைத்துக் கொண்டிருந்தார்கள். அதைச் சிதம்பரம் கண்டார்,