பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திம காலம் 93 டி.பி.க்கு ஆயுர்வேத சிகிச்சையான்னு ஆச்சரியப் படாதே, சிதம்பரம், பெங்களூர் டாக்டர் 'லங்சே' (சுவா சாசயங்கள்) இல்லைன்னு சொல்லி விட்டான். இந்த ஊர் டாக்டர் என்னாலே முடியாதுன்னு சொல்லி விட்டார். கடைசியிலே இந்தச் சிகிச்சை என்று சிரித்துக்கொண்டே சொன்னார் புதுமைப்பித்தன்.

  • .சரி. மிஞ்சிறை தெரியுமா, சிதம்பரம்?

புதுமைப்பித்தனே சொல்ல ஆரம்பித்தார்: ' ' மிஞ்சிறைன்னா நைடதம் - மாதிரி ஒரு நூல் இல்லை , ஒரு ஊர். அங்கே ஒரு வைத்தியன் இருக்கான். அவன் சிகிச்சைதான் இப்போ .” புதுமைப்பித்தன், தமது அந்திம காலத்தில் ஒருபுறம் வேதனையுடனும் ஒரு புறம் சிரிப்புடனும்தான் பேசினார். புன விஷயத்தைப் பற்றி அவர் சொன்னது இதுதான்: உலகம் ஒரு மாதிரியானது. நேரிலே கேட்டாலே பணம் வராது. நோயோடு படுத்துவிட்டால் கேட்க வேண்டுமா? பணத்தைக் குடுத்தால் ஆசாமி எங்கே ஓடிப் போயிடு வானோன்னு பயம்.... படுக்கையில் விழுவது வரையில்தான் மனுசனுக்கு நிலை, கெளர்வம் எல்லாம்... ஆனால், அந்தக் கூட்டத்திலே திறமை அந்தச் சிக்குக்கார மனுசனிடம் தானப்பா இருந்தது! சுகத்தை விரும்பிச் சென்ற அவரது புனா வாழ்க்கை அவருக்கு வேதனையைத்தான் பரிசாகத் தந்துவிட்டது. ஆனால் அந்த நரக வேதனையைச் சாகும்வரையிலும் தான் கிக் கொண்டிருந்த புதுமைப்பித்தன், ஹாஸ்யமாக அவரது வழக்கமான பாணியிலேயே பேசினாரென்றால், அவரது மனப்பண்பையும் துணிவையும் கண்டு பாராட்டுவதை விட, அஞ்சத்தான் முடியும். சாகும் வரையிலும் அவர் நன்றாகப் பேசினார். அந்த நோயின் வாதையிலும் அவர் கேட்டார்: இலக்கிய உலகம் எப்படி இருக்கு? எனக்குப் படிச் சுத் தெரிஞ்சிக் கொள்ளச் சத்தியில்லை. நீ சொல்லியாவ து. தெரிஞ்சிக்கிடுதேன் என்றார் புதுமைப்பித்தன்.