பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் சிதம்பரம் ஏதேதோ சொன்னார்; அதையெல்லாம் கேட்டுவிட்டுப் புதுமைப்பித்தன் பதில் சொன்னார்: * * சிதம் பரம், இலக்கிய ஆசை உனக்கு உண்டு. இருக்கட்டும். உன் முழுநேர உழைப்பையும் அதற்காகச் செலவழித்து விடாதே. இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு விடாதே. அது உன்னைக் கொன்றுவிடும். இலக்கியம் வறுமையைத்தான் கொடுக்கும், அதைப் பொழுது போக் காகவே வைத்துக்கொள்,” சாவதற்கு முந்திய நாளில்கூட அவர் இலக்கியத் தைப் பற்றிப் பேசினார்: இலக்கியம் வாழ்ந்து கொண் டிருக்கிறதா? பின்னே என்ன செய்யும்? நான் ஒருத்தன் செத்துப் போகிறதாலே, இலக்கியம் சாகணும்னு நினைக்க கணுமா? செத்துப் போனாள். வேண்டியவர்கள் எல்லாம் கட்டுரை எழுதித் துக்கம் கொண்டாடுவார்கள். கொஞ்ச நாள் கழிஞ்சி போனா, விஷயமே மறந்து போகும்....” அவரது மனசில் பழைய நினைவுகள், தமது வாழ்க் கைப் பாதையின் - நொடி நிறைந்த பயணம்-எல்லாம் உருவாகித் திரண்டிருக்க வேண்டும். '. புதுமைப்பித்தன் மீண்டும் பேசினார். அது சிதம்பரத்துக்கோ , தம்மைச் சுற்றி யுள்ளவர்களுக்கோ அல்ல. தமக்குத் தாமே பேசிக்கொண். டார்; எங்கேயோ பிறந்தேன். எங்கேயோ வளர்ந்தேன். யார் யாரோ என்னை வளர்த்தார்கள். கடைசியில் - திரு வனந்தபுரத்தில்தான் நம்ம முடிவு போல் இருக்கு... " புதுமைப்பித்தன் செத்துக் கொண்டிருந்தார். 'மகா மFirன 'மான மவுண்ட் ரோட்டில், யாருடைய கவனிப்புக் கும் ஆளாகாது செத்துக் கொண்டிருந்த துலுக்கப் பிச் சைக்காரனைப் பற்றி, அவர் கதை எழுதி யிருக்கிறாரே, அதுபோல் அவர் செத்துக் கொண்டிருந்தார். இலக் கிய சேவகர்கள் புதுமைப்பித்தன் எங்கிருக்கிறார் என்ற விஷ யம்கூடத் தெரியாமல், அவர்கள் காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்; அதே வேளையில் புதுமைப்பித்தன் நாளுக்கு நாள் செத்துக் கொண் டிருந்தார்,