பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்திம காலம் புதுமைப்பித்தன் இருந்த நிலையில் யாரிடமிருந் தேனும் பண உதவி சென்றிருந்தால், அவர் மகிழ்ந் திருக்கக் கூடும் என்று நினைக்கலாம். ஆனால், அந்த மன நிலை அவருக்கு இல்லை; அந்திம தசையில் அந்த மேதை யின் மனப்பக்குவம். வேறு மாதிரி மாறியிருந்தது. “மணரியார்டர் வந்தா, எவ்வளவு சந்தோஷமாயிருச் கும்? நான் இப்போ எனக்கு வரப்போகிற . மணியார்ட ரைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன், புரிய வீல்லையா?' சாவைத்தானப்பா நான் மணியார்டரை எதிர்பார்ப்பது போல எதிர்பார்த்திருக்கேன்.” என்று கூறிச் சிரிக்க முயன்றார். சாவதற்கு முந்திய தினம் புதுமைப்பித்தன், சிதம் பரத்திடம் தமது பாட்டரி விளக்கைக் கொடுத்து,

  • 'இதுக்கு பாட்டரி போட்டு அனுப்பு' என்று சொன்னார்,

விளக்கைச் சிதம்பரத்தின் கையில் கொடுத்துவிட்டு, எழுத்தாளனுக்கே ஒளி பேரிலேதான் ஆசை:ேபாலிருக்கு. நான் போகிற பாதையை யெல்லாம் வெளிச்சமாக்க விரும் பினேன். இப்போ இருட்டிலே - நடக்க ஒளியை விரும்பு கிறேன்... புதுமைப்பித்தன் வீட்டின் இருட்டில் நடக்கத்தான் பாட்டரியை நம்பினார்; ஆனால், அவரது மனத்தைக் 'கவிந்த சாவின் நிழலை, மரணத்தின் இருட்டைப் போக்கு வதற்கு அவருக்கு மார்க்கமே இல்லை, அவர் இருட்டிலே மறைந்து போவதற்காகக் காத்திருந்தார். உலகத்துக்குத் தமது இலக்கியத்தினால் ஒளி தந்த புதுமைப்பித்தன் தாம் மட்டும் இருட்டிலே மறைந்து போவதற்கு அஞ்சவில்லை. சாகின்ற காலத்திலேயும் அவர் மரணத்தைச் சிரித்துக் கொண்டுதான் வரவேற்றார்; ஆனால் அவருக்கு இருந்த ஒரே கவலை யெல்லாம் தமது மரணம் பிறர் பார்த்துப் பயப்படும்படியாகக் கோரமாகவோ, விகாரமாகவோ இருந்து விடக் கூடாதே என்பதுதான். புதுமைப்பித்தனின் பூதவுடலின் கடைசி வாழ்நாள் ; அதுதான் ஜூன் மாதம் 30-ம் தேதி. அன்றிரவு புதுமைப்