பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வடிவங்களிலும் படைப்புக்களை ஆக்கியுள்ளார். உலகத்துச் சிறு கதைகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். என்றாலும், சிறுகதையில் தான் அவர் ஆர்வம், அக்கறை, படைப்பு உற்சாகம், சோதனை வேகம் முதலியவற்றை மிகுதியாக ஈடுபடுத்தினார்.

புதுமைப்பித்தன் என்று சொன்னாலே சிறுகதைதான் ரசிகர்களின் நினைவில் எழும். அந்த அளவுக்கு தனித்தன்மை வாய்ந்த, சிறப்பு மிகுந்த கதைகளைப் படைத்துள்ள இலக்கியச் சிற்பி புதுமைப் பித்தன் ஆவார்.