பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மகாகவி கப்பிரமணிய பாரதியார் சந்திரிகை என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். முற்றுப்பெறாத நாவல் அது. கோபாலய்யங்கார் என்ற டெப்டி கலெக்டருக்கும், விரேசலிங்கம் பந்துலு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மீனாட்சி என்ற இடைக்குலப் பெண்ணுக்கும் நடந்த கலப்பு மனம்பற்றி பாரதியார் வர்ணித்திருக்கிறார்.

கதையின் போக்கு கண்டதும் காதல் என்ற கோபாலய்யங்காரின் இலட்சியத்துடன்-ஏன், பிரமை என்றும் கூறலாம்-முடிவடைகிறது. முடிவுபெறாது இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ என்னவோ? மனிதன் காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே அனலை விழுங்கலாம் புளித்து குழம்பையும், குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்வோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை என்ற முன்னுரையுடன் புதுமைப்பித்தன் கதையை கவாரஸ்யமாக வளர்த்ருக்கிறார்.

கண்டதும் காதல், கலப்பு மணம் என்பதெல்லாம், கல்வித் தரமும் உணவுப் பழக்க வழக்கங்களும், வாழ்க்கைப் பண்புகளும் மிகவும் முரண்பட்டவையாக இருக்ருக்கிற ஜோடிகளிடையே எப்படிப் பொருந்தா மணமாக ஆகிப்போகிறது என்பதை அவர் கிண்டலாகச் சித்திரித்துக் காட்டுகிறார் இந்தக்கதையில்.

புதுமைப் பித்தன் கலப்புத் திருமணத்தின் எதிரி அல்ல. வாழ்க்கையில் இப்படிப்பட்ட முரண்பாடுகளும் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி கேலி பண்ணுவதில் அவருக்கு விருப்பம் அதிகம் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

மத மாற்றம், அதனால் பாதிக்கப்பட்ட இந்துக் குடும்பத்தின் நிலைமை. அதைச் சேர்ந்த தனிநபர்களின் போக்குகள் இவற்றை விவரிக்கும் புதிய கூண்டு புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஒன்று. அதிலும் கலப்பு மனம் நிகழ்கிறது. அதில் வருகிற பெண் உயர்ந்தவள்; படித்தவள்; பண்பு மிக்கவள்.

கோபாலய்யங்காரின் மனைவி கதையில் வருகிற மீனாட்சி படிப்பும் பண்பும் பெற்றிராத பணிமகள். அவளால் மாமிசக் குழம்பும் காரவகைச் சாப்பாடும் இல்லாமல் நாள் கழிக்க முடியவில்லை. அவள் கணவனுக்கு அது ஒத்துவரவில்லை. ஆகவே அவள் திருட்டுத்தனமாகத் தனது சாப்பாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஈடுபடுகிறாள். ஆனால், புதிய கூண்டு கதையில் வருகிற கிறிஸ்துவப் பெண் ஜயா படித்தவள், புத்திசாலி, பண்பு உடையவள், அவள், தன்னை மனப்பதற்காகக் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து தனது வீட்டுக்கே வந்து