பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விட்ட பிராமண இளைஞன் கிட்டுவை நிரந்தரமாகத் தன்னுடையவனாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறாள். அதற்காக அவனுக்கு மாமிச உணவைப் பழக்கிவிட விரும்புகிறாள். கறிவடை தயாரித்துக் கொடுக்கிறாள்.

அதைக் கடித்துவித்தியாசம் உணர்ந்த கிட்டு, இது என்ன என்று கேட்டான்.

‘ஒரு புன்சிரிப்புடன் தன்னுடைய வாயில் ஆட்காட்டி விரலை வைத்துக் கொண்டு இரகசியமாக அவள் ‘கறிவடை’ என்றாள்.

‘ஜயா! உன் காதல் எனக்குப் போதாதா? தான் ரப்பரையுமா தின்னவேண்டும்?’ என்று பரிதாபகரமாகச் சிரித்தான் கிட்டு.

சட்டென்று அவன் முகம் மாறியது. வடைகளை அப்படியே சிதறிவிட்டு, போ போ என்று இரைந்தான்.

ஜயாவிற்கு நெஞ்சில் வாள்கொண்டு குத்தியமாதிரி இருந்தது. அவனுடைய நிலையைக் கண்டு வெளியே சென்று விட்டாள்.

அவள் அன்று இரவு தலைவிரிகோலமாக தலைவாசல்படியில் படுத்துக்கிடந்தது அவனுக்குத் தெரியாது. வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாது. அன்றிலிருந்து அவளும் மாமிச உணவு தொடுவதில்லை. ஆகவே, விட்டுக்கொடுக்கும் மனப்பண்பு அந்தப் பெண்ணுக்கு இருந்தது; அதனால் அவள் மணவாழ்வில் வெற்றி காண முடிந்தது என்பதை இக்கதை மறைமுகமாக அறிவிக்கிறது.

மதமாற்றம் செய்வதற்காக கிறிஸ்தவ சமயத்தினர் கையாளும் செயல்முறைகளையும், அம்மதத்தினுள்ளேயே இருக்கிற இரண்டு பிரிவுகளுக்கிடையே நிலவும் போட்டியையும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் சுயநலமான-மனிதாபிமானம் இல்லாத போக்கையும், அன்பு நிறைந்த அண்ணன் தம்பியர் மத உணர்வு காரணமாக வெறியர்களாய், விரோதிகளாய் மாற நேர்வதையும், புதிய கூண்டு வர்ணிக்கிறது. அந்நிலையிலும் அந்தப் பெண் உயர்ந்த பண்போடு நடந்து கொள்கிறாள். இதை புதுமைப்பித்தன். அழகாக விவரிக்கிறார் கதையில்.

கிட்டு, அம்பி இருவரின் தாயான மீனாட்சி அம்மாள் மரணப் படுக்கையில் கிடக்கிறாள். கிறிஸ்தவனாகிவிட்ட கிட்டு, மனைவி ஜயாவுடன் அவளைக் காண வருகிறான். அம்பி அவனைப் பழிக்கிறான். கிட்டுவும் கோபமாக்ப் பேசுகிறான். அவர்கள் தர்மம் பற்றி சண்டை போட்டுக் கொண்டிருக்கையில், தெய்வமே, நீ இருக்கிறாயா?.இதுதான் தர்மமா? என்று புலம்பியவாறு உயிரை விடுகிறாள் தாய்.