பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அழைத்துக் கொண்டு, சொந்த ஊரைவிட்டு வெளியேறுகிறார். அவருக்காக ஊரே கண்ணிர் வடிக்கிறது (சொன்ன சொல்)

இதற்கு நேர்மாறாகச் செயல்புரிகிறவர்களும் மனிதரிடையே உண்டு என்பதை அவருடைய ‘நியாயம்தான்’ என்ற கதைமூலம் அறியலாம்.

வடலூர் குமாருபிள்ளை, கடன்காரர்களிடமிருந்து தப்பி விடுவதற்காக ஐ.பி. கொடுத்து விட்டு கொழும்பு சென்றார். அங்கே சிரமப்பட்டு, ஒரு கடையில் வேலையாளாகச் சேர்ந்து, பிறகு சொந்தக் கடை வைத்து வளர்ச்சி பெற்றார். அங்கும் பண நெருக்கடி பயங்கரமாக ஏறவும், ஒரு யுக்தி செய்து, தந்திரத்தைக் கடைப்பிடித்து, நம்பியவர்களை ஏமாற்றி அவர் பெரும் பணக்காரர் ஆகிவிட்டார். இந்தக் கதையை புதுமைப்பித்தன் தனக்கே உரிய நடையில் எழுதி, முடிவில் சிந்தனை அடுக்குகளை முன் வைக்கிறார்: 'மூலதனம் பெறுவதற்கு வடலூர்ப்பிள்ளை செய்தது சரியா தப்பா? சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டார். அப்புறம் நாணயஸ்தராக இருந்தாரே முதலில் அவர் கை ஓய்ந்து கிடக்கும் பொழுது அவரை நசுக்கிப் போடவேண்டுமென்று, சமூகம் என்ற தனித்தன்மையற்ற ஒன்று நினைத்ததே அவர் செய்தது தவறானால், முதலில் அவர் ஐ.பி. போடவேண்டிய நிலைமையை ஏற்பட வைத்தது மட்டும் சரியா?

இதை ஆசிரியிரின் வாதம் ஆக அவர் கதையில் சேர்க்கவில்லை. ஓய்ந்து சள்ளுச் சள்ளென்று இருமும் காலத்திலும் வடலூர்ப் பிள்ளைக்கு ஒபாத வேதாந்தமாகிவிட்டது இந்த மாதிரிப் பேச்சு என்று கதையின் முடிவாக வைத்துவிட்டார் அவர். அதன் மூலம் வாசகரின் சிந்தனைக்கு வேலை கொடுத்துவிட்டார் என்று கூறலாம்.

வாழ்க்கைக் கொடுமைகளில் மிகவும் கொடுமையானது வறுமை. வறுமைநிலை மனிதர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. இல்லாமையினால் பாதிக்கப்பட்ட பலரக மனிதர்களும், அவர்களது மனநிலைகளும் வாழ்க்கை முறைகளும் புதுமைப்பித்தனால் யதார்த்தமாகவும் உருக்கமாகவும் கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளன. கணவனுக்குப் பால்கஞ்சி வார்ப்பதற்காக சோரம்போன 'பொன்னகரம் அம்மாளு தெருவில் நின்று விபசாரத்துக்கு அழைக்கிற 'கவந்தனும் காமனும்’ தொழிற்காரி, ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதற்காக என்னென்னவோ செய்தும், பேசியும், தேடி வருகிறவர்களிடம் கடன் வாங்கியும் வாழ்கிற ஒரு நாள் கழிந்தது கதை நாயகரான எழுத்தாளர்: வாழ்வுநாள் பூராவும் உழைத்தும் உயர்வடைய முடியாமல் அவதிப்பட்டு அல்லலுறும் தியாகமூர்த்தி கதையின்