பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கரமான படைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனின் அகல்யை முற்றிலும் தனிரகமானது. இக்கதையில் சாபமும் கிடையாது. சாபத்துக்கு விமோசனமும் உரைக்கப்படவில்லை. கெளதமர் வாழ்வும் இந்திரன் லீலையும் அழகிய முறையில் கதையாக்கப்பட்டுள்ளது. கெளதமர் இந்திர நாடகத்தையும் அகல்யை ஏமாந்துவிட்டதையும் அறிகிறார். அவர் கோபம் கொள்ள வில்லை. அவர் பெரிய ஞானி பண்பட்ட மகாத்மா. இந்திரனையும் ஆகல்யையும் மன்னித்துவிடுகிறார்.

‘அப்பா இந்திரா’, உலகத்துப் பெண்களை சற்று சகோதரிகளாக நினைக்கக்கூடாதா? என்று இந்திரனைக் கேட்கும் அவர், 'கண்ணே அகல்யா, அந்தச் சமயத்தில் உனது உடலுமா உணர்ச்சியற்ற கல்லாய் சமைந்துவிட்டது: என்று அகல்யையிடம் பரிவுடன் கூறுகிறார். இவ்வரிகள் அத் தவசிரேஷ்டரின் தெய்வீக உள்ளத்தை புலப்படுத்துகின்றன.

பல வருடங்களுக்குப் பிறகு, புதுமைப்பித்தன் அகல்யை கதைக்கு வேறொரு திருப்பம் கொடுத்து எழுதினார். சாப விமோசனம் எனும் சிறந்த கதை அது. இப்படிக் கதையை மாற்றி எழுதியபோது, பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அவற்றை இஷ்டமான கோணங்களிலெல்லாம் பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

‘சாப விமோசனம்’ எழுதப்பட்டிருக்கும் முறையிலும், நடை நயத்திலும், பாத்திரங்களின் தன்மைகளிலும், உள்ளடக்கத்திலும் அழகும் சிறப்பும் பெற்றுத் திகழ்கிறது. கதையின் ஆரம்பமே எடுப்பும், மிடுக்கும், தனி வனப்பும் கொண்டுள்ளது.

சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும், வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம் ஒர் அபூர்வ சிற்பி பூலோகத்திலே இதற்காகவென்றே பிறந்து தன் கனவை எல்லாம் கல்லில் வடித்துவைத்தானோ என்று தோன்றும். அவ்வளவு வாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம்-சொல்லில் அடைபடாத சோகம்-மிதந்து, பார்க்கின்றவர்களின் வெறும் தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று, சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை.

இதிலிருந்து சொல் அழகோடும் கற்பனை மிடுக்கோடும் கதை வளர்கிறது. ராமன் கால் துளசி பட்டதும் கல்சிலை உயிர்பெறுகிறது.