பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 பாதுகாத்துக் கொள்கிறேன்’ என்று கர்த்தரைப் பார்த்துக் கூறிய மனிதன்-

உயிரை எடுத்துச் செல்லவந்த எமதர்மனிடம், உன்னாலே உசிரைத் தானே எடுத்துக்கிட்டுப் போகமுடியும்? இந்த உடலைக் கூடத் துாக்கிட்டுப் போவத் தெறமை இருக்கா? யோசிச்சுப் பாரு. ஒண்ணெவேறயா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா? உன்னைப் படைச்ச கடவுளாலேயே செய்ய முடியாதே. அப்புறமில்ல உனக்கு என்று வாக்குவாதம் செய்து, அவனைத் தோல்வி அடையச் செய்த கிழவி-

இத்தகைய படைப்புகள் புதுமைப்பித்தனின் சிந்தனை வேகத்தை, மனோதர்மத்தை, புதிய நோக்கை நன்கு வெளிப்படுத்துகின்றன. கடவுளை வைத்து அவர் படைத்த கற்பனைகளில்-கலைப் படைப்புகளில்-எல்லாம் உன்னதச் சிகரமாக விளங்குவது ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்.’

இதில் அவருடைய கற்பைனை வீச்சு, கேலியும் நையாண்டியும், வாழ்க்கை நோக்கு, மனித இயல்புகள் பற்றிய ஆய்வு முதலியன அழகாகவும், இரசித்து மகிழத்தக்க விதத்திலும் கலந்து கானப் படுகின்றன.

வறுமை வாழ்வு வாழ்கிற மேலகரம் கந்தசாமிப்பிள்ளை, சென்னையில் பிராட்வேயும் எஸ்பிளனேடும் கூடுகிற சந்தியில் ஒரு ஒரத்தில் நின்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, கடவுள் அவர்முன் தோன்றினார். திருவல்லிக்கேணிக்கு வழி கேட்டார். அதிலிருந்து கடவுளுக்கும் கந்தசாமிப்பிள்ளைக்கும் நடக்கிற உரையாடல்கள் ரசமானவை. பிள்ளையின் துணையோடு கடவுள் அடைகிற அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.

‘பூலோகத்தைப் பார்க்க வந்தேன். நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி என்றார் கடவுள்.

பிள்ளையின் வீட்டருகில் வந்ததும், கடவுள் தனது சுய உருவைக் காட்டி, ‘பக்தா’ என்றார்.

கந்தசாமிப்பிள்ளை கடவுளிடம் கண்டிப்புக் குரலில் பேசினார்: ‘ஒய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தை கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர். இன்னொரு தெய்வம் வரும் தலையைக் கொடு என்று