பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோனகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர். நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர். அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழகவேண்டுமானால், மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

கடவுள் மெளனமாகப் பின்தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்திலே வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப்பட்டது.

இப்படி மனிதனிடம் தோல்வியே அடைகிறார் கடவுள். சிறு குழந்தைகூட விளையாடப்போய், அந்த விளையாட்டிலும் அவருக்கு இடையே நிகழும் பேச்சுக்கள் நயம் நிறைந்து, பொருள் பொதிந்தனவாக அமைததுள்ளன.

கந்தசாமிப்பிள்ளை, தனது பத்திரிகையான சித்தாந்த தீபிகைக்குக் கடவுளை ஜீவிய சந்தாதார் ஆக்கும் முயற்சியில் தீவிரமாகவே இருக்கிறார், கதை நெடுகிலும்.

கடவுள் ஏதாவது தொழில் புரிய நினைக்கிறார். கந்தசாமிப் பிள்ளையின் யோசனைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. கூத்து ஆடலாமே என்கிறார். தேவியையும் தருவிக்கிறார்.

திருத்ய கலாமண்டலி நடத்துகிற திவான் பகதூர் சாஸ்திரிகள் வீட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்று பிள்ளை அறிமுகப்படுத்தி, நாட்டியம் ஆடுவதற்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டார்.

கடவுளும் தேவியும் திவான் பகதூர் முன்னே ஆட முற்பட்டார்கள். அவர்களுக்கு இயல்பான ஆடைகளுடன், கையில் சூலத்துடன், கண்களில் வெறியும் உதட்டில் சிரிப்பும் புரண்டோட, ஆட ஆரம்பித்தார் கடவுள். -

‘சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு. என்னங்காணும் போர்னியே காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு’ என்று திவான் பகதூர் அதட்டினார்.

‘ஒய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்கணும்? புலித் தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக் கொண்டு வருவா: பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும். புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொளள வேணும். கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும் வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய