பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சாஸ்திரத்துக்கு ஒத்துவராது. என்று பரமசிவனிடமே சொன்னார்.

கடவுளுக்கு இதிலும் தோல்வி.

‘தெரிந்த தொழிலைக்கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே என்றார்’ கடவுள், கந்தசாமிப்பிளையிடம்.


முடிவில்,உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம். உடன் இருந்து வாழ முடியாது என்றார் கடவுள்.

அப்பவும் கந்தசாமிப்பிள்ளை விட்டுவிடவில்லை. ‘உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு’ என்றார்.

ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்தை மேஜைமேல் போட்டு விட்டு, கடவுள் மாயமாய் மறைந்தார்.

இந்தக் கதை புதுமைப்பித்தனுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்த இலக்கியப் படைப்பு என்று தெரியவருகிறது. சிறுகதை பற்றிய கட்டுரை ஒன்றில் அவர் இவ்விதம் குறிப்பிடுகிறார். தமிழிலே நட்சத்திரக் குழந்தைகள், சிவசைலம், எங்கிருந்தோ வந்தான், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கதைகள் ஒப்புயர்வற்றவை.

(அவர் குறிப்பிடும் இதர மூன்று கதைகள் முறையே பி.எஸ். ராமையா, த.நா. குமாரஸ்வாமி, மெளனி ஆகியோரால் எழுதப் பட்டவையாகும்.)

நினைவுகளை வளர்த்து கதையைப் பின்னுகிற உத்தியைக் கையாண்ட புதுமைப்பித்தன் நனவோட்ட முறையை (Stream of Consciousness) ஒரு சில கதைகளில் உபயோகித்திருக்கிறார்.

‘நினைவுப் பாதை’ இலக்கிய ரசிகர்களால் மறக்க முடியாத சிறு கதைகளில் ஒன்று. மனைவி இறந்துபோய், தனித்திருக்கிற வைரவன் பிள்ளையின் நினைவோட்டத்தை இது விவரிக்கிறது. முழுவதும் நன வோட்டத்தினாலான கதை அன்று இது. துக்க வீட்டுச் சூழ்நிலை, அங்கே வந்து கூடியிருப்பவர்களின் மனநிலை மற்றும் ஆசைகள், நோக்கங்கள், கால உணர்வு முதலியவற்றையும், அவற்றினுாடே தனியனாகிவிட்ட முதியவரின் நினைவுகளையும் இக்கதையில் புதுமைப்பித்தன் திறமையாக வர்ணித்திருக்கிறார்.

முற்றிலும் நனவோட்டமாக எழுதப்பட்டது ‘கயிற்றரவு’ புதுமைப் பித்தனின் சிறந்த சிறுகதைகளில் மற்றுமொன்றான இது, தமிழில் வெளி வந்துள்ள சிறந்த படைப்புகளில் முக்கியமான ஒன்று என்று கருதப்பட வேண்டும்.