பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கதாபாத்திரங்களைப் பற்றிக் கூறும்போதும், அவர்களது மன நிலையை வர்ணிக்கிறபோதும்-சாதாரண விஷயங்களைக்கூட சாதாரன வாசகனை சிரமப்படுத்தக்கூடிய பின்னல்கள் நிறைந்த ஒரு நடையை, வேண்டுமென்றே கையாண்டு ஒரு பிரமிப்பை உண்டாக்கி வியப்பு எழுப்புவது புதுமைப்பித்தனுக்குப்பிடித்த பாணியாக உள்ளது. ‘செல்லம்மாள்’ கதையிலிருந்து இரண்டு உதாரணங்கள்

‘பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது. சாவின் சாயிைலே அவரது மனம் நிலைகுலையவில்லை. அதனால் பிரமநாயகம் பிள்ளையை பந்தவினை யறுத்த யோகி என நினைத்து விடக்கூடாது; அல்லது. அவரது மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, போதிமரம் வரையில் கொண்டுவிடும் ஞான மிகுந்த சுத்ததோனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை, நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அனுபவித்தவரே. பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடு பள்ளங்களைப் பார்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறு சிறு மேடுகள் யாவும், படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஒரு அனுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.

இது ஒன்று. மற்றொன்று-

‘பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் கட்டி, பிறகு ஆறி மரத்துப்போன வடுவாகிவிட்டன. சம்பளத் தேதி என்று ஒன்று இல்லை. தேவையானபோது வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து, அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக் கேட்டு, வழக்கம்போல, இன்றும் கிடைக்காது என்ற மன ஒய்ச்சலுடன் கேட்டபோது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்துவிடுவதைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை . பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை. இப்படியாக, மாதம் முழுவதும் தவனை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காச் செல வழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன், பிரமநாயகம்பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.

புதுமைப்பித்தன் உவமைகளிலும் புதுமையைக் கையாண்டிருக்கிறார். உவமை கூறுவதற்காக அக்காலத்திய அரசியல் நிகழ்வுகள், கலை உலகப் பழக்கங்கள். புராண விஷயங்கள் போன்றவற்றை தாராளமாக அவர் உபயோகித்துள்ளார். -