பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 ‘மணிக்கொடி’ முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த இம் மொழி பெயர்ப்புக் கதைகள். ‘உலகத்துச் சிறுகதைகள்’, ‘பிறமொழிச் சிறுகதைகள்’ என்ற புத்தகங்களாக வெளி வந்துள்ளன.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் சிலவற்றையும் அவர் தமிழாக்கினார். அவை உலக அரங்கு என்ற பெயரில் புத்தகமாக வந்திருக்கின்றன. மேரி ஷெல்லி எழுதிய பயங்கர நெடுங்கதை ஒன்றை ‘பிரேத மனிதன்’ என்று அவர் மொழி பெயர்த்திருக்கிறார்.

ரஷ்ய நாவலாசிரியர் அலெக்சாந்தர் குப்ரின் விபசாரிகளின் வாழ்க்கையை அடிப்படையாக்கி எழுதியுள்ள சிறந்த நாவல் ‘யாமா தி பிட்’ என்பது. அதன் முதல் பகுதி படுகுழி என்ற தலைப்பில் புதுமைப் பித்தனால் தமிழாக்கப்பட்டிருக்கிறது.