பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 ‘இலக்கியமும் வாழ்க்கை தான் இலக்கியம் இலக்கியம்தான் வாழ்க்கை’ (கடவுளின் கனவும் கவிஞனின் கனவும்).

‘வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்வது தத்துவம் வாழ்க்கையைச் சொல்வது. அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம்.’

‘பொதுப்பட நோக்கின், இலக்கியத்தின் ஜீவநாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை’ (இலக்கியத்தில் உட்பிரிவுகள்).

‘கலை என்பது உள்ளத்தில் எழும் உணர்ச்சியின் பிரதிமை; அழகின் வடிவம்.’

‘இலக்கியம் கலைகளில் எல்லாம் உயர்ந்தது. கவிதை கலையின் அரசி’ (இதயத் துடிப்பின் பேச்சு).

இலக்கியம் என்பது, நாடிய பொருளைக் கூட்டுவிக்கும் சாதனம் என்று நினைத்திருப்பதைப் போன்ற தவறான அபிப்பிராயம் வேறு கிடையாது. இலக்கியம் உள்ளத்தின் விரிவு உள்ளத்தின் எழுச்சி, மலர்ச்சி. -

இலக்கிய கர்த்தா வாழ்க்கையை அதன் பல சிக்கல்களுடன், துணுக்கத்துடன், பின்னல்களுடன் காண்கிறான். அதன் சார்பாக அவன் உள்ளத்திலே ஒரு உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சி நதியின் நாதந்தான் இலக்கியம்.

அவன் நோக்கில் பட்டது, பெயர் தெரியாத புஷ்பமாக் இருக்கலாம் வெறுக்கத்தக்க ராஜீய சூழ்ச்சியாக இருக்கலாம்; அல்லது மனித வர்க்கத்துக் கொடுமையின் கோரமாக இருக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. அந்த அம்சத்தை நோக்கியவுடன் அவனது மனமும் இருதயமும் சலிக்கின்றன. இந்த சலனத்தின் பிததிமையே இலக்கியம்.

‘இலக்கியத்தின் உயிர்நாடி உணர்ச்சி. உணர்ச்சியில் எழாத தர்ம சாஸ்திரங்கள், வாழ்க்கையின் கீழே இருக்கும் பாறாங்கல்லுகள். இந்த உணர்ச்சியின் உண்மைதான் புதிய விழிப்பிற்குக் காரணம். உண்மையே இலக்கியத்தின் இரகசியம்’ (இலக்கியத்தின் இரகசியம்).

இச்சிந்தனைகள் புதுமைப்பித்தனின் இலக்கிய நோக்கை இலக்கியக் கொள்கைகளை-ஒரளவுக்கு எடுத்துக்கூறுவனவாகவும் இருக்கின்றன.

தமிழ்க் கவிதையில் சப்த ஜாலங்கள் பற்றியும், கம்பனின் கவிதா