பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மேதையை பற்றியும், பாரதி கவிதைகள் குறித்தும், பாரதிதாசன் பற்றியும் அவர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

தமிழர் நாகரிகத்தின் கிராம வாழ்க்கை அரிஸ்டாட்டில் கண்ட ராஜீயப் பிராணி என்று இரண்டு தனிக் கட்டுரைகள். ராமாயண, பாரத காதாபாத்திரங்கள் பற்றிய சிறு சிறு கட்டுரைகள்: நாட்டுப் பாடல்கள் மற்றும் சில தனிப் பாடல்கள் போன்றவற்றின் நயங்களைச் சுவையுடன் விவரிக்கும் கட்டுரைகள், ரேடியோ, சாப்பாட்டு ரசிகர்களின் குணம்-இப்படிப் பல்வேறு விஷயங்கள் பற்றிய கட்டுரைகளும் புதுமைப்பித்தன் சிருஷ்டிகளில் இடம் பெற்றுள்ளன. அவருக்கே இயல்பான கேலியும், குத்தும் கிண்டலும் இவ் எழுத்துக்களிலும் காணப்படுகின்றன.

புதுமைப்பித்தன் ‘தினமணி’, ‘தினசரி’ நாளிதழ்களில் பணியாற்றியபோது, புத்தக மதிப்புரைகள் நிறையவே எழுதினார். சூடும் சுவையும் நிறைந்தவை அவை. ‘ரசமட்டம்’ என்ற புனைபெயரில் காரசாரம் மிகுந்த கண்டனக் கட்டுரைகள் சில எழுதினார்.

சிறுகதை, நாவலாசிரியர் மற்றும் பத்திரிகை ஆசிரியரான 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் பற்றி அவர் எழுதிய சூடான விமர்சனங்கள் அந்நாளைய இலக்கிய ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்து நிற்பவை

அதேபோல, தமிழில் தழுவி எழுதப்பட்ட-ஆயினும், சொந்தப் படைப்பு எனப் பெயர் பண்ணப்பட்டிருந்த-பில்கணன் நாடகம் ஒன்றையும் அவர் கடுமையாக விமர்சித்து நீண்ட கட்டுரை எழுதினார். “இரவல் விசிறிமடிப்பு என்ற அந்தக் கட்டுரை, அது வெளிவந்த நாட்களிலும், அதன் பின்னர் வெகு காலம் வரையிலும், ரசிகர்களால் வியந்து பாராட்டிப் பேசப்பட்டது. இவை எல்லாம் புத்தக வடிவம் பெறவில்லை.