பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அனுபவத்தை சப்த நயங்களினால்தான் உணர்த்தமுடியும். அவன் உள்ள நெகிழ்ச்சியை எவ்வளவுக்கெவ்வளவு அப்படியே குறையாமல் உணர்த்துகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மேதை விளங்குகிறது.

கவிதையில் சரியான வார்த்தைகள், சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது. கவிஞன் சொல்லவந்த விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல ஒரு வழிதான் உண்டு. அது அவனுக்குத் தெரியும். அதில்தான் கவிஞனது மேதை விளங்குகிறது’

‘கவிஞனுக்கு அவன் உள்ள அனுபவத்தை எடுத்துக்காட்டக் கூடிய நடை வேண்டும். கவிதை கேட்கப்படுவது. உணர்ச்சி உத் வேகத்திற்குத் தகுந்ததுபோல் நடையின் நயமும் வேண்டும்’

கவிதை குறித்து சில சில கட்டுரைகளில் அவர் எழுதியுள்ள கருத்துக்கள் இவை. அவற்றுக்கு ஏற்ப அவர் கவிதைகள் இயற்றினார். ' ‘மணிக்கொடி’ காலத்தில் எழுத்தாளர்கள் ந.பிச்சமூர்த்தியும் கு.ப. ராஜகோபாலனும் வசன கவிதை என்று யாப்பு இல்லாக் கவிதைகள் எழுதிவந்தார்கள். பின்னர் இம்முயற்சி கட்டில் அடங்காத கவிதை எனவும் குறிப்பிடப்பட்டு வந்தது. 1940 களில் அது மேலும் வலுப் பெற்று வளர்ந்தது.

புதுமைப்பித்தன் வசன கவிதையை ஆதரிக்கவில்லை. தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் அவர் அவ்வப்போது தெரிவித்தும் இருக்கிறார்.

‘யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்தைகளைக் கோர்ப்பதல்ல.யாப்பு விலங்கல்ல. வேகத்தின் ஸ்தாயிகளை வடித்துக் காட்டும் ரு பங்கள். குறிப்பிட்ட யாப்பமைதி பழக்கத்தினாலும் வகையறியா உபயோகத் தினாலும் மலினப்பட்டுவிடும்பொழுது, ரூபத்தின்மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பு. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளது என்று கொள்ளவேண்டும். வெண்பாவும் விருத்தமும் கண்ணிகளும் ஒரு விஸ்தாரமான அடித்தளமே ஒழிய, வெண்பாவிலேயே ஆயிரமா யிரமான ரூப வேறுபாடுகள் பார்க்கலாம். இன்று ரூபமற்ற கவிதையெனச் சிலர் எழுதிவருவது, இன்று எவற்றையெல்லாம் 'ருபமெனப் பெரும்பாலோர் ஒப்புக் கொள்கிறார்களோ அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் எனக் கொள்ள