பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இப்படி இன்னும் யதார்த்த நிலைகளைக் கூறி, ‘நிசமாக்க கேட்கின்றேன்-ஒரு வார்த்தை

நீயு மிருத்தல் நினைவணங்கே

நிசந்தானோ?

நியுமிருத்தல் நிசந்தானோ?

என்று கவிஞர் கேட்கிறார். புதுமைப்பித்தன், வேளுர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற புனைபெயரில் தனது கவிதைகளை எழுதினார். அவர் உணர்ச்சி வேகத்தோடு எழுதிய கவிதைகளில் ஒன்று ‘ஓடாதீர்’ என்பது.

‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் ஒருவரான கு.ப. ராஜகோபாலன் 1944ல் மரணம் அடைந்தார். வறுமை வாழ்வில் மிகவும் துயரப் பட்டவர் அவர். அவர் உயிரோடு இருந்த காலத்தில் உரிய கவனிப்பையும் கவுரவத்தையும் பெறவில்லை. அவர் இறந்த பிறகு அவருக்காகத் தமிழ்நாட்டில் நிதிகள் திரட்டப்பட்டன. கலைஞனை அவனது வாழ்நாளில் கவனிக்காது கஷ்டப்படும்படி விட்டுவிட்டு, அவன் செத்த பிறகு அவனது புகழைப் பாடிக் கொண்டாடுகிற போக்கை விரும்பாத புதுமைப்பித்தன் ரசிகர்களை நோக்கி பாடுகிற தன்மையில், ‘ஒகோ உலகத்தீர், ஒடாதீர்’ என்ற இந்தக் கவிதையை இயற்றியுள்ளார். சூடான அங்கதமும் சுவையான கிண்டலும் நிறைந்த கவிதை இது.

நாகரிக யுவதிகள் யுவர்களின் போக்கையும், தற்காலக் காதலின் தன்மையையும் கிண்டல் செய்து, அவர் ‘காதல் பாட்டு’ என்ற கவிதையைப் படைத்திருக்கிறார். காதலியின் வர்ணனை வெகு ரசமாக அமைந்துள்ளது. இதில். வர்ணிப்பின் இறுதிப் பகுதி இது

‘காதல் மணங் கமழும்

காலேஜுக் கன்னி,

பேபி எனப் பெயராள்

பெதும்பைப் பருவத்தாள்

கைப்பையும் வாட்சும்

கால்செருப்பின் நாஸூக்கும்

தரையின் தவம் என்ன

தார்ரோட்டுக் கனவென்ன

வெற்றிப் பராக்கு சொல

வேகமாய் நடந்து வந்தாள்.

அன்று வந்த மாடல் அதிரூபவல்லி’ அவள் காதல் மொழி பேசும் கண்ணனிடம் கூறுகிறாள்