பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘பண்ணமைந்த காதல்
பரமபதம் கிடைக்கப்
பதைக்கின்றேன். ஆனாலும்
பாங்கியிலே கொஞ்சம்
பணம் ஏதும் வேண்டாமா? காதல் பெரிது -
அதுதான் எனக்கும் தெரிகிறது!
காசு பெரிதென்பதை நீ
கருத்திலேன் கொள்ளவில்லை?
காசு இல்லாமல் என்ன
கதை நடக்கும்?’

‘இணையற்ற இந்தியா’ என்பது நையாண்டி நிறைந்த பாட்டு, தற் கால யதார்த்த நிலையை-நாட்டின் நிலைமையையும் மக்களின் போக்கையும்-குத்திக்காட்டும் கவிதை இது.

‘ஆற்றங்கரை யருகே அணிவயல்கள் உண்டு;
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது’

என்று கூறும் கவி விவரிக்கிறார்.

‘வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டி
டுவோம்
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம்!
அத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதைபேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்.
இந்தியா தேசம்-அது
இணையற்ற தேசம்!’

‘தொழில்’ என்றொரு கவிதை ரேடியோக் கவியரங்கத்துக்காக எழுதப்பட்டது. முருகனை நோக்கிப் பாடும் வெண்பாக்களாக அமைந்த இக்கவிதை வெகு ரசமானது. பரிகாசத் தொனிமிகுந்தது. ஆனால்,தொழில், அதன் தன்மை மற்றும் பிரிவுகள், உயர்வு அல்லது சிரமம் போன்ற எதைப்பற்றியும் எதுவுமே சொல்லாதது.

“கும்பிடுவார். குழைவார். கூத்தாடப் பல்லிளிப்பார்
வம்பிடுவார் பின்னால் வழக்கிடுவார்-அம்புவியில்
அன்னார் தொழிலை அழகாகப் பண்ணி வச்சேன்
என்னமோ காணாமல் போச்சு.”