பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘பண் என்பார் பாவம் என்பார் பண்புமர பென்றிடுவார்
கண்ணைச் சொருகிக் கவி என்பார்-அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு!’

-

‘தொழில்’ கவிதையில் உள்ள இரண்டு பாடல்கள் இவை.

அவருடைய விரக்தியையும் நம்பிக்கை வறட்சியையும் பிரதிபலிக்கிற இருட்டு நல்ல கவிதைகளில் ஒன்று ஆகும்.

நடந்தேன், நடக்கின்றேன்

நடந்து நடந்தேகுகின்றேன்,
நடந்தேன், நடக்கின்றேன்

நடந்து நடந்தேகுகின்றேன்.

செல்லும் வழி இருட்டு

செல்லும் மனம் இருட்டு,
சிந்தை அறிவினிலும்
தனி இருட்டு.

நடையால் வழிவளரும்

நடப்பதனால் நடைதொடரும்
அடியெடுத்து வைப்பதற்கு

ஆதிவழி ஏதுமில்லை.
சுமையகற்றிச் சுமையேற்றும்

சுமைதாங்கியாய் விளங்கும்
சுமைக்குள்ளே தானியங்கிச்

சுமையேற்றும் சும்மாடே!

எங்கு எதற்கு
ஏனென்று கேட்டக்கால்
எங்கு எதற்கு
ஏனென்றே கேள்வி வரும்.
என்னை அணைத்தேகும்

இருட்டுக் குரல் தானோ?
என்னை அணைக்க வரும்

மருட்டுக் குரல் தானோ?
நடந்தேன், நடக்கின்றேன்

நடந்து நடந்தேகுகின்றேன்.
நடந்தேன், நடக்கின்றேன்

நடந்து நடந்தேகுகின்றேன்.