பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலவிவரங்கள் 79 புதுமைப்பித்தனோடு நெருக்கமான நட்புகொண்டு பல வரு!. காலம் அவரோடு பழகியவர் கவிஞரும் எழுத்தாளருமான தொ.மு.சி. ரகுநாதன். அவர் புதுமைப்பித்தன் வரலாறு' என்று விரிவாகவே ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் அவருடைய தோற்றம், குணங்கள், நகைச்சுவை, உரையாடல், திறமையற்றி எல்லாம் திறமையாக விவரித்துள்ளார். புதுமைப்பித்தனின் தோற்றம் பற்றிய வர்ணனை இங்கே தரப்படுகிறது ‘புதுமைப்பித்தன் நிதானமான உயரமுள்ளவர். சுமார் ஐந்தே முக்கால் அடி உயரமிருப்பார். ஆனால் உயரத்துக்குத் தக்கபடி உடம்பிலே சதைப்பிடிப்பு கிடையாது. மிகவும் ஒல்லியான : சரீரம். தொளதொளத்துத் தொங்கும் வெள்ளைக் கதர் ஜிப்பாதான் அவரது உடலின் ஒட்டெலித் தன்மையை மூடி மறைத்துக் கொண்டிருக்கும். ஒடிசலான, கீரைத்தண்டுபோல் மெலிந்த உடல், தலைமயிரை அதிகமாக வளர்த்துப் பின்புறமாகச் சீவிவிட்டிருப்பார். ஆனால் அவர் தலைமயிரைச் சீவி விட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அது கலைந்து போய் விடும். அவரது தலைமயிர் குத்திட்டுச் சிலிர்த்து நிற்கும் முரட்டு ரோமம் அல்ல. தொய்வும் மென்மையும் பொருந்திய பிள்ளை முடிதான். இருந்தாலும் அவர்தாமே தன் தலைமயிரைக் கலைத்துவிட்டுக் கொள்வார். மெலிந்து பிஞ்சாய் இருக்கும் தமது கைவிரல்களால் அடிக்கடி தலைமயிரைப் பின்னோக்கிக் கோதிவிட்டுக் கொள்வார். எனவே அவரது கிராப் வரிசை குலைந்து தொளதொளத்துச் சரிந்து கிடக்கும். அதில் இங்கும் அங்குமாக வெள்ளிய நரை லேசாகப் புரையோடிப் போயிருக்கும். அகலமான நெற்றி, எனினும் பாளம் பிளந்த கரிசல் காட்டைப் போல் நெற்றியில் கீறல் விழுந்த மாதிரிச் சுருக்கங்கள் படிந்திருக்கும். அவரது கண்கள் கடலாழத்தின் மடியிலே அமிழ்ந்து கிடந்து புரளும் முத்துக்களைப்போல் ஆழக் குழிக்குள் அமிழ்ந்து கிடந்து ஒளிவீசும் கண்கள். கண்களிலே ஏதோ ஒரு ஏக்கம் கலந்த வெறி தெறிப்பதுபோல் தோன்றும் லேசாகக் கிழடுதட்டிப்போன பிரமை தட்டுப்படும். சிலபேருடைய கண்களை எவ்வளவு நேரமானாலும் கண் கூசாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். புதுமைப்பித்தன் கண்களை அப்படிப் பார்க்க முடியாது. அதன் பார்வை பார்க்கிறவர்களின் கண்களைச் சீக்கிரம்'உறுத்திவிடும். அவரது மூக்கு சிறிதளவு ஏந்திவிட்டாற்போல் நிமிர்ந்து தோன்றும். அவரது பற்கள் மிகவும் பெரியவை. வெற்றிலைக்