பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. புதுமைப்பித்தனின் செல்வாக்கு t - இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்குப் புதுமையும் புத்துவிரும் கொடுத்தவர் பாரதி. தமிழ் வசனத்துக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். ஆனால் பாரதிக்கு முன் தமிழில் மிகச் சிறந்த கவிச் செல்வங்கள் இருந்தன. புதுமைப் பித்தனுக்கு முன் மிகச் சிறந்த வசனச் செல்வங்கள் இருந்தன என்று சொல்ல முடியாது. புதுமைப்பித்தனின் இலக்கியம் தமிழ் நாட்டு வசன இலக்கியத்தின் சொத்து. அவர் வசன இலக்கிய மன்னர். புதுமைப்பித்தனுக்குப் பிறகு, சிறுகதைக் கலையில் குறிப்பிடத் தகுந்த சாதனைகள் புரிந்துள்ள படைப்பாளிகளில் ஒருவரான கு. அழகிரிசாமி இவ்வாறு எழுதியிருக்கிறார். படைப்பாளியும் இலக்கிய விமர்சகருமான ரகுநாதன் இப்படி எழுதுகிறார் புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சியிலும் வரலாற்றிலும் ஒரு மைல்கல்; ஒரு திருப்புமுனை: ஒரு சகாப்தம். அதில் சந்தேகமில்லை. எவ்வாறு பாரதி தமிழ்க் கவிதை உலகில் நடை, வடிவம், உள்ளடக்கம் முதலியவற்றில் புதியன புகுத்தி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக்குத் தலைமகனாக விளங்கினாரோ, அதேபோல் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்கு சிறப்புமிக்க தலை மகனாக விளங்கியவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனின் எழுத்துக்கள், அவர் வாழ்நாளில் போதிய கவனிப்பையும், உரிய வரவேற்பையும், போற்றுதலையும் பெற்ற தில்லை. எனினும், அவற்றின் சிறப்புத் தன்மையை உணர்ந்து ரசித்தவர் களும் இல்லாமல் போகவில்லை. அந்நாட்களில், எழுத்துலகில் வளர்ச்சிப் பாதையில் அடி எடுத்து வைத்திருந்த இளைய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனின் எழுத்துக் களால் ஈர்க்கப்பட்டு அவற்றின் பாதிப்புக்கு ஆளானார்கள். 1940களில் எழுதத் தொடங்கிய கு. அழகிரிசாமி, தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன், 1950களில் எழுத ஆரம்பித்த ஜெயகாந்தன் ஆகியோர் இப்படிப்பட்டவர்களேயாவர். மற்றும் பல