பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்ற பெருமைக்கு உரிய புதுமைப்பித்தன் (சொ. விருத்தாசலம்: 1906-1948) சிறுகதைக்கு இலக்கியத் தகுதி பெற்றுத் தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புரட்சியும் புதுமையும் நிறைந்த இவரது சிறுகதைகளில் புதுப்புது உத்திகளும், மொழிக்கு வளம் சேர்க்கும் நடை நயமும் கலந்துள்ளன. வசதி மிகுந்த, ஆயினும் மனிதாபிமானம் இல்லாத, பெரிய மனிதர்களை எள்ளி நகையாடும் போக்கு, ஏழை எளியவர்களுக்கு இரக்கப்படும் உள்ளம், தன்னம்பிக்கை, புரட்சியை நாடும் மனப்பான்மை ஆகியவற்றை இவரது கதைகளில் காணலாம். வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டு தமிழ் நடைக்கு புது வேகமும் தனி அழகும் சேர்த்தவர் புதுமைப் பித்தன். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது கதைகள், சோகத்தை அடி நாதமாக்க் கொண்டு, வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி சுட்டிக் காட்டும் சொற். சித்திரங்கள் ஆகும். இந் நூலாசிரியர் திரு. வல்லிக்கண்ணன் சிறுகதைகள், நாவல்கள் பல எழுதியிருப்பதோடு, நல்ல இலக்கியத் திறனாய்வாளர் என்ற பெயரும் பெற்றி ருப்பவர். இவரது 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற ஆய்வு நூல் 1978-ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றுள்ளது. Pudumaipithan (Tamil) (Reprint) ISBN 81-720.1-744-8 Rs. 15.