பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|102 ன்ங்கள் இல்லத்தில் நடைபெற்ற என் அண்ணுரின் திருமணம் என் உள்ளத்தில் பசுமையாகக் காட்சியளிக் கிறது. பூவாளுர் அறிஞர், அ. பொன்னம்பலஞர் தலைமையில் திருமணம் நடந்தது. வீதியை அடைத்துப் போடப்பட்டிருந்த பச்சைப் பந்தலில் நாதஸ்வர இசை ஒலி பெருக்கியில் முழங்கத் திருமணம் தொடங்கியது. பல தமிழறிஞர்களும், சீர்திருத்தவாதிகளும் சொற் பொழிவாற்றினர். அந்தக் காலத்தில் சடங்குகள் இல்லாமல் செய்யப்படும் சீர்திருத்தத் திருமணத்துக்கு ஊர்மக்கள் நடுவிலும், உறவினர் நடுவிலும் பெரிய எதிர்ப்பு இருப்பது வழக் கம். இந்தத் திருமணத்திலும் அத்தகைய எதிர்ப்புக்ள் இல்லாமல் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன் சுய்மரி யாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது நாடறிந்த செய்தி. எங்கள். குடும்ப நண்பராகிய திருக்கண்டேசுவரம் ரெட்டியார் 'ஊர் ம்க்களைப் பன்கத்துக் கொள்ளலாமா? ப்ோயும் போயும் கழுநீர்ப் பானையில் விழுந்து விட்டீர்களே!' என்று என் பெரியப் பாவைக் கடிந்து கொண்டார். இந்தத் திருமணத்தின் சிறப்பு இப்போது உங்களுக் குத் தெரியாது; பிற்காலத்தில் தான் தெரியும்' என்று எங்கள் பெரியப்பா ரெட்டியாருக்குப் பதில் கூறிஞர். அறிஞர் அண்ணு முதலமைச்சரானதும் முதல் வேலை யாகச் சீர்திருத்தத் திருமணச் சட்டத்தை தமிழகச் சட்ட மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினர். இன்று சீர்திருத்தத் திருமணம் எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எங்களுடைய தூரத்து உறவினராகிய நல்லாற்றுார்க் குமாரசாமி முதலியாரின் மனைவி விளக்கு இல்லாத திரு மணம் திருமணமா?’ என்று கூறி, என் அண்ணியாரை அடிக்க வந்தார். அங்கு இருந்தவர்கள் அவரைத் தடுத்து அப்போது அம்ைதியை நிலை நாட்டிஞர்கள். திருமணத்தில் மாலை மட்டும் மாற்றிக் கொள்ளப் பட்டது. எங்கள் அண்ணி வீட்டிற்கு வந்த பிறகு தமிழ் வாழ்க’ என்று பொறிக்கப்பட்ட பதக்கத்தோடு கூடிய தங்க்ச்சங்கிலியை அவருக்கு அணிவித்தோம். [...]