பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103:முருகுசுந்தரம் என் இளமைக் காலம் பெரும்பாலும், புதுவையில் கவிஞர் இல்லத்திலேயே கழிந்தது எனலாம். அந்நாளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நான் இப்போதும் எண்ணிப் பார்த்து மகிழ்வதுண்டு. வறுமையும்செழிப்பும்கவிஞர் குடும்பத்துக்குச்சகடக்கால் போல் சுழன்று வந்து கொண்டிருக்கும். ஆனல் கவிஞ ருக்கு வறுமையும் தெரியாது. செல்வ நிலையும் దీ:: வந்தவர்களை விருந்தோம்ப வேண்டும். அதில் அவர் ஊக்கமாக இருப்ப்ார். இந்தப் பண்புதான் அவர் எழுதியுள்ள குடும்ப் விளக்கில் விளக்கம் பெறு கிறது. தம் வீட்டின் வ்றுமையைப்பற்றிக் கவலைப்படா மல், பிறர் வறுமைக்கு வடிகாலாகஇருக்க வேண்டும் என்று நினைப்பவர் கவிஞர். கவிஞன் எந்தப் பொருளைப் பார்க்கிருனே), அந்தப் பொருளாகவே தானும் மாறி விடுகிருன். என்னையும், என் அண்ணன் குழந்தைகளாகிய தமிழ்ச் செல்வம். பாண்டியன் ஆகிய இருவரையும் அடிக்கடி கவிஞர் வெளியில் அழைத்துச் செல்வார். நாங்கள் கடற்கரைச் சோலைக்கு (Botanical garden) ச் செல்லுவோம். கப்பல் சுனின் வருகைக்கு சிக்னல் வழங்கும்.இடத்துக்குக்கீழே அமர்வோம். நாங்கள் மணலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்போம், கவிஞர் சிந்தனையில் ஆழ்ந்திருப் பார்: கவிஞர்களுக்க்ே உரித்தான கற்பனை உலகில் நீந்திக் கொண்டிருப்பார். நாங்கள் பல முறை தட்டி எழுப்பினாலும் சட்டை செய்யாமல் அமர்ந்திருப்பார். சில் நேர்ங்களில் இதற்கு நேர் மாருக எங்க்ளுடன் சேர்ந்து கடற்கரை மணிலில் விளையாடுவார். நண்டு களை எங்களுக்குப் பிடித்துக் காட்டுவார்; கிளிஞ்சல் களைப் பொறுக்கித் தருவிார். உணர்ச்சியால் உந்தப் பட்ட சில வேளைகளில் பேப்பர் கொடு’ என்று எங்களைக் கேட்டார். அவ் வேளையில் பேப்பர் கிடைக்கர்மல், அங் குக் கிடக்கும் சிறு துண்டுக் காகிதங்களை எடுத்துக் கொடுப்போம். அதில் கிளி, பருந்து, வண்டு ஆகியவற் றின் சிறு ஓவியங்களை வரைந்து காண்பிப்பார். அவை களைப் பற்றிப் பாடல் புனைந்து எங்களுக்குப் பாடிக் காட்டுவார். பாவேந்தர் வயதில் முதிர்ந்தவர்; உலகம் வியக்கும் பெருங் கவிஞர். ஆனல் குழந்தைகளுடன் உறவர்டும் ப்ோது தாமும் குழந்தையாகவே ம்ாறிவிடும்