பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107/முருகுசுந்தரம் சுப்ரமணியத்தையும் சிறப்பு விருந்தினராகப் பாவேந்தர் அழைத்து இருந்த்ார். விழா பாவேந்தர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பாரதியாரைப் பற்றிப்பலரும் பேசினர். திருவாளர் சங்கு சுப்ரமணியம் பேசும் போது, "பாரதி சாதியை எதிர்க்கவில்லை; அவ்வாறு எழுதவும் இல்லை’ என்று பேசினர். கூட்டத்தில் சலசலப்பு ஏற். பட்டது. பாவேந்தர் எழுந்து பொதுமக்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு, சங்கு சுப்ரமணி யத்தின் கருத்துக்களை ஆதாரத்துடன் மறுத்துப் பேசி ளுர், அது மட்டுமின்றிப் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளான சங்கு சுப்ரமணியத்தைத் தம்முடன் அழைத்துச் சென்று அரவிந்தர் ஆசிரமத்தில் தங்க வைத்து இரவோ டிரவாக மிகப் பாதுகாப்புடன் கடலூர் வழியாகக் காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தார். திருவானர் சங்குசுப்ரமணியம் பார்ப்பனராக இருந் தாலும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் பாரதிதாசன் அவ ருக்குப் பாதுகாப்புக் கொடுத்துப்_பத்திரமாக ஊருக்கு அனுப்பிவைத்தது எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது. குற்றம் குறைகளைக் கண்ட இடத்திலேயே கண்டிக்கும் இயல்புடையவர் பாரதிதாசன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், யார் தலைவராக இருந்தாலும் அஞ்சும் வழக்கம் அவருக்குக் கிடையாது. எந்தச் சூழ்நிலை யிலும், எந்த இடத்திலும் தம் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை அச்சமின்றி வெளியிடும் ஆற்றல் மிக்கவள் அவர். 1959ஆம் ஆண்டு புதுவை திரு.முருகையன் அவர் களின் திருமணத்தைப் புரட்சிக்கவிஞர் தலைமை ஏற்று நடத்தினர். அத்திருமண விழாவில் பழைய கொள்கை களுக்கு வக்காலத்து வாங்கிப்பேசிய தமிழ்ப் புலவர் ஒரு வரை உட்காரச் செய்ததுடன், அவருட்ைய மூடக்கொள் கைகளைக் கடிந்துபேசினர் புலவருக்கும் அறிவுரைவழங் ஞர், ம்ணமக்களுக்குத் தேவையான கருத்துக்களையே மணவிழாவில் கூறவேண்டும் என்றும் வற்புறுத்தினர்.