பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111/முருகுசுந்தரம் வெளியிடுமாறு பொறுப்பாசிரியரான திரு. தண். பாணிக்கு அறிவித்தார். பாவேந்தருடன் பல்லாண்டுகள் ஒன்ருகப் பணிபுரிந்த வித்துவான் புதுவை மு. மாணிக்கம் அவர்கள் 1946ஆம் ஆண்டு பாவேந்தருக்குப் பொற்கிழி அளித்தவிழாவின் போது பாவேந்தரின் வாழ்க்கைவரலாற்று நூலினை வெளியிட்டார். அந்நூலில் பாவேந்தரின் பிறந்தநாளைக் குறிப்பிடும் கீழ்க்கண்ட வெண்பா உள்ளது. 蠶 தொண்ணுற் ருேராமாண்டில் ஒயவரும் ஏப்ரலிரு பத்தொன்பான்_துயநாள் சுப்புரத் தினச்செம்மல் అ என்றறைவர் இப்புவியில் வாழ்பெரியோ சே." எனவே மேலே குறிப்பிட்டுள்ள மூன்று சான்றுகளும் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் 29-4-1891 என்பதை உறுதிப்படுத்துகின்றன. பாவேந்தரின் பிறந்தநாள் பற்றி இருந்த குழப்பத்தைப் போன்றே, அவருடைய அன்னையார் பெயரைக் குறிப் பதிலும் குழப்பம் இருந்தது. அன்னையாரின் பெயர் இலட்சுமியா? மகால்ட்சுமியா? என்பதே அக்குழப்பம். அக்குழப்பத்தின் காரணமாகத் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தார் பள்ளி மாணவர்க்காகத்தாம் வெளியிட்ட பாவேந்தர் வரலாற்றில் அவருடைய அன்னையார் பெயரையே விட்டுவிட்டனர். புதுவை நகர் மன்ற ஆவணத்தில் கண்டபடி பாவேந்தரின் அன்னையார் பெயர் இலட்சுமி' என்பது தெளிவாகிறது. C