பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


115|முருகுசுந்தரம் தீ உங்கள் இருவருக்கும் அளவாகப் பகல் உணவுசமைத் திருக்கிருய், கணவன்தன் அலுவலகத்தில்லிருந்து பகல் 1மணியளவில் வீட்டிற்கு வருகிருன் வரும் போது உடன் ஒரு தீ வட்டியை அழைத்துக் கொண்டு வருகி ருன. கண்ணகி இவன் என் பள்ளித் தோழன். இந்த ஊரில் தான் தொழில் செய்கிருன். இவனை வழியில் பார்த் தேன்; அழைத்து வந்து விட்டேன்; இலைபோடு"என்று கூறுகிருன். - கணவன் ஆணை, புதுவிருந்து. கண்ணகி என்ன ச்ெய் வாள்! உடனே இரண்டு இல்ைகள் போடுகிருள்; இருவ ருக்கும் உணவு பரிமாறுகிருள். இருவரும் உணவு உண் கின்றனர். கண்ணகி! இன்று கூட்டு, குழம்பு எல்லாம் நன்ருயிருக் கின்றன. இவனுக்கு இன்னும் சோறு வை கூட்டு போடு கணவன் கட்டளை இடுகிருன். விருந்துண்ண வந்தவர் வேண்டாம்; போதும்" என்கி ருர், "இவன் அப்படித்தான் சொல்லுவான், நீ போடு” என்கி ருன் கணவன். நீ சோறும், குழம்பும், கூட்டும் சற்றுக் கூடுதலாகவே விருந்தினர் இலையில் படைக்கிருய். வாழைப்பழம் இருந்ததே கொண்டுவா கணவரின் அடுத்த கட்டளை. இருவரும் உணவு உண்டு எழுந் தனா. பிற்பகல் இரண்டு மணிக்கு உன் கணவர் அலுவலகம் கிளம்பிவிட்டார். விருந்தாக வந்த ஆளும் நன்றி சொல்லிவிட்டு அவருடனே நடந்தான். இனி நீ உணவு உண்ண வேண்டும்! அடுக்களையுள் சென்று,சோற்றுப்பானையைப்பார்க்கிருய், அதில் பருக்கையும் இல்ல்ே; குழம்பும் இல்லை; கறியும் இல்லை, ஆந்து வாழைப் பழத்தைத்தான் விட்டு வைத் தார்களா? அதையும் தின்று தொலைத்தார்கள்.