பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்)116 மீண்டும் உணவுதயார் செய்தாகவேண்டும். உனக்கோ காலையிலிருந்து வேலை செய்த அலுப்பு. சரி. இரவு பார்த்துக் கொள்வோம். இனியொரு முறை எப்படிச் சமைப்பது? என்று ஒரு குவளை தண்ணிரைக் குடித்து விட்டுச் சுருண்டு கொள்கிருய். மாலை அலுவலகத்திலிருந்து உன் கணவன் வீடு திரும் புகிருன். கண்ணகி கடற்கரைக்குப் போகலாம்கிளம்பு’ என்கிருன். குழந்தையைச் சுமந்து கொண்டு நீ பின்னே நடக்க அவன் முன்னே நடக்கிருன். கடற்கரைப் பூங்காவை நீங்கள் அடைகிறீர்கள். அங்கே வெள்ளேக்காரர்களின் குழந்தைகளைக் கை வண்டிகளில் ಶ್ದಿ தள்ளிக்கொண்டே சிலபணிப்பெண்கள் உலவு கிஞ்ர்கள். அக்குழந்தைகளைக் கண்டவுடன் உன் கண்கள் மகிழ்ச்சியால் மலர்கின்றன. ஏதோ ஒரு புதுமையான படைப்பைக் கண்டவள் போலத்திகைத்து நிற்கிருய். என்ன அதுவும் குழந்தைதான்; உன்கையில் இருப் பதும் குழந்தைதான். பின் ஏனிந்தத்திகைப்பு? வெள்ளைக்காரக் குழந்தைகள் கொழு கொழுவென்று மூக்கும் விழியுமாய்ப் பார்ப்போர் விழிகளைக் கவரும் வண்ணம் உள்ளன. உன் குழந்தை நாக்குப்பூச்சியைப் போல் இருக்கிறது. ஏன் அந்தக் குழநதைகள அபபடி? உன் குழந்தை இப்படி? இது உன் உள்ளத்தில் எழுந்துள்ள வினு. வெள்ளைக்காரி மணிக்கணக்கோடு சாப்பிடுவாள். காலே 8 மணி, பகல் 12 மணி; இரவு 8 மணி. அவள் எப் போதும் பகல் பட்டினி கிடப்பதில்லை. அவள் கணவன், பகல் சாப்பாட்டிற்கு வரும்போது ஒரு விருந்தினனே அழைத்து வரமாட்டான். அப்படியே அவன் ஒருவனே விருந்துண்ண அழைக்க விரும்பினுல், அதற்கொரு தாளைக் குறிப்பிட்டு, மணியையும் சொல்லி அன்றைக்கு வரச்சொலவான். அன்று அவனுடன்அனே வருக்கும உணவு சிறந்தமுறையில் தயார் செய்திருப் பார்கள். எல்லாரும் மகிழ்ச்சியுடன் விருந்துண்பர்.