பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11:முருகுசுந்தரம் இருபதாம் நூற்ருண்டில் தமிழ் அன்னை பெற்றெடுத்த இணையற்ற கவிஞராக மட்டுமன்றி, ஈடற்ற புரட்சில் பாவலராக, அஞ்சா நெஞ்சு படைத்த பகுத்தறிவுச் சிந்தனையாளராக விளங்கிய பாவேந்தரின் நினைவு நான் (ஏப்ரல் 21 இல்) சித்திரைத் திங்கள் 9ஆம் நாள் வரு கிறது. அவரது பொன்னுடல் மறைந்த நாள் 21-4-64 ஆகும். அவரது உணர்விலே அரும்பி சொற்களிலே மலர்ந்து கருத்துக்களிலே மணங்கமழ்ந்த அப்படிப்பட்ட கவிதைகளைப் புதிதாகப் பெறும் வாய்ப்பு முடிவுற்ற நாள் அந்நாள். தமிழ் மொழியின் மீட்சிக்கும் மறு மலர்ச்சிககும், உரிமைக்கும் ஏற்றத்துக்கும், ஆட்சிக்கும் மாட்சிக்கும் எழுச்சிப் பண்பாடி, உணர்ச்சிக் கனல் எழுப்பி, இளைஞர்களின் குருதியிலே சூடேற்றி, இன உணர்வோடு மொழிகாக்கும் போரிலே குதித்திடச் செய்த அந்தக் கவிஞரின் குரல்-ஒய்ந்து பதினேழு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கண் மூடிகளாக-கருத்துக்குருடர்களாக, தம்மையே இழிபிறவிகளாக எண்ணிக்கிடந்த ஏமாளிகளான தமிழ் மக்களை அறிவுக்கண் திறந்து காணச் செய்த கவிஞரின் உணர்வுகள் முழக்கங்கள், பாட்டு வரிகள், பகுத்தறிவு விளக்கங்கள், சாதிசமய மூட நம்பிக்கைகளைச் சாடிய கேள்விக் கணைகள்-யாவும் இன்றும் நமதுஉள்ளங்களில் ஒலித்துக் கொண்டுள்ளன. தமிழன் என்று ஒருவன் வாழ்ந்திடும் காலம் வரை-அவை ஒலித்துக் கொண் டிருக்கும் தகுதியுடையன. புரட்சிக் கவிஞரின் கவிதை,தமிழ் உள்ளளவும் வாழும். அவர் உருவாக்கிய கவிதை மர்பும் வாழும்! அவர்தம் வழிவழி வளரும் கவிஞர் தலைமுறையும் வளரும், ஆயினும்புரட்சிக் கவிஞர் ஊட்டிய உணர்வுகள்ே வளர்த்த சிந்தனைகளை வாழ்வித்தஇனப்பற்றை மலர்வித்த மொழி ஆர்வத்தை வடித்த கற்பனையை தொடுத்த உவமைகளை தீட்டிய இயற்கையை