பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுகைக் கல்லறையில்!? வழங்கிய செஞ்சொற்களை முழங்கிய பாநடையை அவரது கவிதையைச் சுவைப்பதாலன்றி வேறு வகை யால் பெறுதல் இல்லை. அப் பாவேந்தரின் நிலைபெற்ற தோற்றமே, அழியாத வடிவமே அவருடைய உயிர் புகுந்த ஓவியமே அந்தக் கவிதைகள் தாம்! அவை: நம்மோடு வாழ்பவையே! நமக்காகப் பிறந்தவையே! அவையெல்லாம் நம்மினத்தின் வாழ்விற்காகத்தான்! நம்மை வாழவைப்பத்ற்காகத் தான்! எனவே, பாவேந்: தர் இன்றும் வலம் வருகிருர் அவரது கவிதை வடிவில்: நம்மோடு உரையாடுகிருர் பாட்டு நடையில்! நமக்கு. உணர்வூட்டுகிருர் அவற்றைப் படிக்கும் நிலையில்! ஆம். அந்தக் கவிஞரின் கவிதைகளைப் போற்றிடும் கடமை யைச் செய்வதிலேதான்-தமிழ் இனக் காப்புக்கு ஏற்ற அரண் கண்டவர்களாவோம் என்பதை நாம் மறத்த லாகாது. அவரது நினைவு போற்றுங் கடமை தமிழர்க்கு எந்: நாளும் உரியது எனினும், இந்நாளில் (ஏப்ரல் 211 நாடெங்கும் கொண்டாடுவது நமது கடமை. கவி ஞரிடையே "அரிமா எனவும், புலவர்களிடையே தமிழ்க் களிறு’ எனவும் பகுத்தறிவாளர்களிடைய்ே ஏறு என வும், வலம் வந்த பாவேந்தரிடம் நான் பழகும் வாய்ப் புப் பெற்ற நாட்கள் நினைவிற்கு வருகின்றன. 口 1940 ஆம் ஆண்டு. நான் அண்ணுமலைப் பல்கலைக் கழ கத்தில் பயின்று கொண்டிருந்தேன். சிதம்பரத்தில் என் தந்தையார்-ஒரு தொழில் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு நாள் புவனகிரி செல்லும்வழியில்புரட்சிக் கவிஞர் எங்கள் இல்லம் வந்தார். அவரது புவனகிரி (பெருமாத்துர் நண்பர்கள் பலர்- என் தந்: தையாரிடம் மதிப்புடன் பழகி வந்தனர். அவர்கள் என் தந்தையாரைப்பற்றிக் கூறியிருந்ததல்ை கவிஞர் வந் தார். என் தந்தையார் அவர் தோற்றத்தைப் பார்த்த வுடனேயே-அவர் யார் என்பதைப் புரிந்துகொண்டு "வாங்க, வாங்க, கவிஞரே!” என்று ஆர்வத்துடன் வரவேற்ருர், பின்னர் இருவரும்-தன்மான இயக்கம். இந்தி எதிர்ப்பு-முதலானவை பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் உணவருந்தினர். எங்கள்