பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


181|முருகுசுந்தரம் தோன்றி, அவரின் தலையாய கொள்கைகளை முழு உணர்வோடு பின்பற்றி வாழ்ந்து கொண்டிருப்பதில் உவகை அடைகிறேன். 曰 சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள். இரவு எட்டுமணி. சமையல் கூடத்திலிருந்து விதவித மான வாசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. வீட்டின் கூடம் நாற்காலிகளாலும் மேசைகளாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. மேசைகள் மீது இலைகள் போடப்பட்டு முக்கிய விருந்தினர்க்குப் பிடித்தமான வான்கோழி பிரி யாணி, கோழிக்கறி இவைகளெல்லாம் பரிமாறப்பட் டுள்ளன. பலா, வாழை போன்ற கனிகளும் இலையில் இடம் பெற்றிருக்கின்றன. வந்திருந்த முக்கிய விருந்தினர், மற்றவர்கள் உட்பட எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர். முக்கிய விருந் தினர் நடுவில் அமர்ந்திருக்க என் தாத்தா ஒருபக்கமும் நான் ஒருபக்கமும் அமர்ந்திருக்கின்ருேம். ' என்னுடைய பேத்தி’--முக்கிய விருந்தினர்க்கு என்னை அறிமுகப் படுத்துகிருர் என் தாத்தா. "உங்களுடைய மகனுேட மகளா?” 'இல்ல. என்னுடைய பொன்னு வசந்தாவோட மக.' நான் வியப்போடு இதனைக் கேட்டுக் கொண்டிருக் கிறேன். என் பக்கத்தில் என்னுடைய பெரிய தம்பி அமர்ந்து கொண்டிருக்கிருன், உங்க பாட்டு ஏதாவது பாடுமா?--முக்கிய விருந்தினர் கேள்வி, நல்லாப் பாடும். பாடு?--என் தாத்தாவின் பதில். உரத்த குரலில் பாடி முடிக்கிறேன் நான், எல்லாரும் சிரித்துக் கொண்டே கைதட்டுகின்றனர், விருந்துக்குப் பொருத்தமான பாடலை நான் பாடியதைக் கேட்டு, எல் லாரையும் வியக்கவைத்த அந்தப்பாடல்: