பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக்கல்லறையில் 192 பலவித வாழைப் பழமொடு கொய்யா பலா விளா பேரிச்சை மாம்பழம் சில வகைக் கிச்சிலி, பொம்பிலி மாசுடன் சீத்தா பழமும், ஆத்தா பழமும் குலை குலையாகக் கொடிமுந்திரியும் இன்னும் பல வித கனிகளுடனே என்ன வென்றே எடுத்துரைப்பேன் நான் இந்தக் கடைதனிலே இருக்கும் பொருள் வரிசை என்ன வென்றே எடுத்துரைப்பேன். முக்கிய விருந்தினர் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் சிரித்துவிட்டு என்னைத் தட்டிக் கொடுக்கிருர். ஆம். அன்றைய முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டவர் காமராஜர் தான். அவரோடு பக்கத்தில் அமர்ந்து உண் ணும் பேறு என் தாத்தாவால் எனக்குக் கிடைத்தது. Ա மற்ருெரு முறை...... கவர்னர் மாளிகை... விருந்து... ஆம். எங்கே விருந்தென்ருலும் என்னையும் அழைத்துச் செல்லத் தவற மாட்டார் என் தாத்தா. பலவிதமான உணவு வகைகள் தட்டில் பரிமாறப்பட்டுள்ளன; பழங் கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவரவர்க் குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிருேம். என்னிடம் ஓர் ஆப்பிளை எடுத்துத் தருகிருள் தாத்தா. நான் அதைப் பத்திரமாகக் கையில் வைத்துக் கொண் டிருக்கிறேன். அதை மறுபடியும் போகும் போது அங் கேயே வைத்து விட்டுச் செல்ல வேண்டும் என்று எண் னிக் கொண்டு பயத்தோடு தின்ஞமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். "தின்னு’-தாத்தாவின் குரல். "திரும்பவைத்து விட்டுத்தானே போகனும்? நான்