பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133|முருகுசுந்தரம் தின்னலாமா?’ என்று சந்தேகத்துடன் கேட்கிறேன். அடே. தின்னுமா--சிரிக்கின்ருர் தாத்தா. இன்னும் எனக்குப் பயம் நீங்கவில்லை... பயத்தோடு பாதியைத் தின்றுவிட்டு, மீதியைத் தம்பிக்குப் பத்திரப் படுத்திக் கொள்கிறேன். கவர்னரிடம் அன்று எனக்கு அறிமுகம். 1964-ஏப்பரல் 21...... ராஜா உயர்நிலைப்பள்ளி...... தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன... நானும், என்னுடைய தம்பியும் எழுதிக் கொண்டிருக் கின்ருேம். தலைமையாசிரியர் எங்களை நோக்கி வருகிருர். "தமிழ்ச் செல்வம். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை யாமே!... பேப்பர்ல வந்திருக்கு...நீ தம்பியைக் கூட்டிக் கிட்டு வீட்டுக்குப்போ...' தேர்வைத் தொடர்ந்து எழுத முடியாத ஏமாற்றம், தாத்தாவின் உடல்நிலை குறித்துத் திகைப்பு:வீட்டிற்குத் திரும்புகிருேம். தாத்தா இறந்த செய்தி காதில் நெருப்புத் துண்டமாய் விழுகிறது. மாலையில் தாத்தாவின் உடல் வேனில் வருகிறது. கலைஞர், கண்ணதாசன் ,டி.கே. சண்முகம் போன்ருேர் கள் மலர் வளையம் வைக்கின்ருர்கள். பிறகு யார் யாரோ வருகிருர்கள். போகிருர்கள்! உடல் முழுக்க மாலையால் மூடப்பட்டுள்ளது. நான் அழுது கொண்டே இருக்கின்றேன். பலர் என்னைச் சூழ்ந்து கொண்டு