பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|138 தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற வெற்றிப்படத்தை எடுத்து, மிக வசதியாக ஏ.கே. வேலன் இருந்த நேரம். சென்னை இல்லத்தில் நான் அவரைப் பார்க்கச் சென்ற போது தொலை பேசி மணி ஓயாமல் அடித்துக் கொண்டி ருந்தது. ஆடு நாற்காலியில் (Rocking chair) அமர்ந்த வண்ணம் அவர் பேசிக் கொண்டிருந்தார். ஆடம்பர மான "சினிமாத்தனம்' அவரைச் சூழ்ந்திருந்தது. பாவேந்தர் கடிதத்தை அவரிடம் பணிவாக நான் கொடுத்தேன், அதைப் பிரித்துப் பார்த்து விட்டு. "நடிப் வில் முன் அனுபவம் உனக்கு உண்டா?’ என்று என் டம் கேட்டாச். நான் இல்லை என்றேன். அப்படியென்ருல் ஏதா வது ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நடி. எவளுவது பார்ப்பா, கூப்பிடுவான். சிவாஜி, எஸ்.எஸ். ஆர் எல்லாம் அப்படித்தான் வளர்ந்தாங்க. போt என்று முகத்திலடித்தாற்போல் பேசிளுச். என்னை அவர் ஒருமையில் அழைத்த முறையும், பதில் சொன்ன முறையும், என்னையோ அல்லது பாவேந்தரையோ அவர் மதித்துப் பேசியதாகத் தெரியவில்லை. நான் ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினேன். பாவேந்தரை மறு முறை சந்தித்தபோதுகூட, திரு.ஏ.கே வேலன் என்ன் சொன்னர் என்பதை அவரிடம் சொல்லவில்லை. வீணுக அதைச் சொல்லிப் பாவேந்தர் உள்ளத்தைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. பிறகு எதிர்பாராமல் புதுவைவில் ஒருமுறையும், தியாக ராயநகர் உயர்நிலைப்பள்ளி இலக்கிய விழாவில் ஒரு முறையும் பாவேந்தரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போதெல்லாம் என் நலத்தை அக்கறை யோடு விசாரிப்பார்; தம்மை இல்லத்தில் வந்து பார்க் கும்படி கூறுவார். நான் அப்போது சென்னை-ஈரோடு ரயிலில் அஞ்சல் பிரிப்பாளராக இருந்தேன். வாரத்தில் மூன்று நாள் பகலில் ஓய்வு. பாவேந்தர் அப்போது போய்ஸ் ரோடு கமலா கோட்னிஸ் வீட்டில் குடும்பத் தோடுகுடியிருந்தார்.நான் ஆடிக்கடி வீட்டுக்குச்சென்று பாவேந்தரைப்பர்ர்த்துப் பேசிவிட்டுத்திரும்புவேன்.