பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13|முருகுசுந்தரம் இல்லம் என்பதால், சைவ உணவையும் (வேறு வழி iயில்லை என்று) மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டார். அப்போதுதான் அவரை நெருங்கிக் கண்டேன். உணவு முடிந்ததும் சிகரெட்” வாங்கிவரச் சொன்னர்; வாங்கி வந்து கொடுத்தேன். 'நீ என்ன படிக்கிறே?’ என்ருர், முதல் தொடர்பு பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியெட்' என்றேன். உடனே மகிழ்ச்சியோடு- பலே-பலே-அப்படித்தான்படி. அந்தப் பயல்களுக்கெல்லாம் நமது திறமையைக் காட்டனும். நல்லாப்படி” என்று அன்போடு கூறினர். அதுவே அவரிடம் எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு. அடுத்த ஆண்டு திராவிட இயக்கச் சார்புடைய ஒரு வணிகர் மறைந்ததையொட்டி நடத்தப்பட்ட நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் தலைமையேற்றிட இசைந்து சிதம்பரம் வந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பலருள் நானும் ஒருவன். நான் ஓர் இளம் மாண வகை இருந்து தடையின்றித் தொடர்ந்து பேசியது அவ ருக்கு ஒரு வகையில் வியப்பின் ஏற்படுத்தி இருந்தது. பின்னர் பாவேந்தர் பேசுகையில் ஏதோ மாணவன் அன்பழகன் பேசப்போகிருன் என்று சொன்னேன். இது, பேச்சா இது-பேச்சு-இப்படியா? மூச்சு விடக்கூட நேரம் வேண்டாமா?’ என்று சொல்லிவிட்டு, மற்ற வர்களெல்லாம் பிறந்து வளர்ந்த பின்னர்தான் பேசு வார்கள். இவன் என்னடான்னு-பேசிக்கொண்டே தான் பிறந்திருப்பான் போலிருக்கு-என் நண்பர் கலியாணசுந்தரம் (மணவழகளுர்) தந்த கொள்கைப் பயிற்சி. இப்படித்தான் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். ஆமாம்-அப்படித்தான்’ என்ருள். தொடர்ந்து கவிஞர் 'ஏதோ சாகாழlயிலே ஞான சம்பந்தன் பாடினுருன்னு-நல்லாத்தான் பாடினருதாளம் தவரும-அது கடவுள் அருள் என்கிருர்கள். இப்பொழுது-மாணவன் அன்பழக்ன் பேசியது கேட் டோமே இது என்னவாம் என்று அவங்களை நீங்க கேளுங்கோ' என்று குறிப்பிட்டுப் பேசிளுள்.