பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189|முருகுசுந்தரம் பாண்டியன் பரிசைத் திரைப்படம்ஆக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியபிறகு, தி.நகர் இராமன் தெருவில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் குடிபுகுந் தார் பாவேந்தர். ‘பாரதிதாசன் பிக்சர்ஸ்’ என்ற விள்ம் பரப் பலகை பங்களா மூகப்பை அண்ரி செய்தது, காரும். சோபாவும், எடுபிடி ஆட்களும், விருந்தும், வேடிக்கை யுமாக இராமன் தெரு வாழ்க்கை அப்போது அவருக்கு அமைந்திருத்தது. கவியரசருக்கேற்ற கம்பீர வாழ்க்கை ஆது. பாவேந்தர் இராமன் தெருவில் குடியிருந்த போது எனக்குத் திருமணம்_நிச்சயிக்கப்பட்டது. பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒபான் ரங்கசாமி யின் இல்லத்தில் பெண்ணெடுக்க நாங்கள் முடிவு செய்திருந்தோம்.திருமணத்துக்கு நாளும் குறிக் கப்பட்டது. திருமணம் பண்ருட்டியில் நடைபுெத இருந்தது. நான் பாவேந்தர் தலைமையில் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். என் கருத்தை உணர்ந்த பாவேந்தர், 'என் பிள்ளைக்கு நான்தான் திருமணம் செய்வேன். நான் கட்டாயம் திருமணத்துக்கு வந்து நடத்திக் கொடுப்பேன். கவலைப்படாமல் பேர்!’ என்று கூறி என்னே அனுப்பி வைத்தார் பாவேந்தர். திருச்சி கபேவில் அவர் தங்குவதற்கு முதல் நாளே ஓர் அறை ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் இரளே பாவேந்தர் பண்ருட்டி வந்துவிட்டார். என் பெற்ருேர் தமது கையால் வாழ்த்தி எடுத்துத் தந்த மங்கல நாணை மணப்பெண்ணின் கழுத்தில் சூட்டி னேன். உடனே அங்கிருந்த பெரியோர்கள் பாவேந்தர் காலில் விழுந்து வணங்கும்படி எங்களைப் பணித்தார் கள். பாவேந்தர் உடனே எழுந்து, முதலில் உன்னு டைய பெற்ருேரை வணங்கு. அதன் பிற்கு யார் காலில் வேண்டுமானலும் விழு” என்று என்னேன் பார்த்துச் சொன்ஞர். சென்னையில் நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் உத்திய பொழுது பாவேந்தர் இரண்டு மூன்று முறை