பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்/140 என் இல்லத்துக்கு வருகை தந்தார், அவருக்கு, நாங்கள் விருந்து பட்ைத்த போது சில் உணவு முறைப் பக்குவங் களை என் மனைவிக்கு எடுத்துச் சொல்லுவார். வடுமாங்காய் ஊறுகாய் எப்படிப் வோடுவது, மற்ற ஊறுகாய் எப்படிப் போடுவது என்று சொல்லு, வார். பண்ருட்டி நிலக்கடலைப் பருப்பு பவளம் போல் இருக்கிறது என்று பாராட்டுவார். Q ஒரு முறை கோவையில் புலவர் குழுவின் கூட்டம் நடை பெற்றபோது பாவேந்தர் என்னையும உடன் அழைத்துச் சென்ருர், மற்ற புலவர்கள் தங்குவதற்கு வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாவேந்தருக்கும், டாக்டர் மு.வ, அவர்களுக்கும் கோவைப் பேரறிஞர் ஜி.டி. நாயுடுவின் இல்லத்தில் தங்கு ஏற்பீடு செய்ய்ப் பட்டிருந்தது. நானும் பாவேந்தரோடு தங்கியிருந்: தேன். திருவாளர் நாயுடுவும் எங்களோடு சாப்பிட்டார். சாப்பிட்டு முடிந்ததும் முக்கோணவடிவில் வெட்டப்பட்ட பப்பாளிப் பழத் துண்டில் ஒரு சிறு கரண்டியைச் செருகித் தந்தார்கள். ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல் பழத்தின் ஊனை நாங்கள் கரண்டியால் சுரண்டி எடுத் துச் சுவைத்தோம். இதில் இரும்புச்சத்து உள்ளது; உடலுக்கு மிகவும் நல்லது என்று நாயுடு கூறினர். மூன்று நாள் பாவேந்தரோடு கோவையில் தங்கியிருந் தேன். இது,எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்று எண்ணி நான் இன்னும் மகிழ்ல்துண்டு. . . . கோவைவில் தங்கியிருந்த போது ஒரு மகளிர் பள்ளியில் சொற்பொழிவாற்றப் பாவேந்த்ர் அழைக்கப்பட்டார். பாவேந்தர் தமது பேச்சைத்துவக்கும் போது "புதிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர்த்தோட்டத்துக் குள் நுழைந்தது போன்ற உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். [...] பாவேந்தர் இல்லத்துக்கு அவரைப் பார்க்கப் பலரும் வருவர். கலைஞர்கள், கவிஞர்கள். அரசியல் வாதிகள்