பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 152 பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியில் மயில்’ என்னும் தலைப்பில் உள்ள பாடல் குறிப்பிடத்தக்கது. அஃதோர் அங்கதப்பாடல் (Satre). எப்போதுமே பெண்கள் அண்டை அயலார் விவகாரங்களை அறிந்து கொள்வதிலும், அவற்றைப் பலர் கூடி விமர்சிப்பதிலும் ஆர்வமுடையவர்கள். இக்குறையைப் பாவேந்தர் இப் பாடலில் மிகவும் நயம்படக் கேலி செய்திருக்கிரு.ர். "இயற்கை அன்னை கலாப மயிலுக்கு நீண்ட கழுத்தை யும், பெண்களுக்குக் குட்டைக் கழுத்தையும் கொடுத் திருக்கிருள். ஏன்?' என்று ஒரு விைைவ எழுப்பி அவரே அதற்கு விடையும் கூறுகிரு.ர். அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்பதற்கே இயற்கை அன்னை, இப்பெண்கட் கெல்லாம் குட்டைக் கழுத்தைக்கொடுத்தாள்! உனக்கோ, கறையொன்றில்லாக் கலாப மயிலே, நிமிர்ந்து நிற்க நீள் கழுத்தளித்தாள்! திருமதி செளந்தரம் கைலாசம் இப்பாடலை நயமாகப் பாடிவிளக்கி விட்டுக் கவிஞர் இப்பாடலைத் துணிந்து பாடியிருந்தாலும், இக் குற்றச் சாட்டைப் பெண்கள் கேட்டால் எங்கு கோபித்துக் கொள்வார்களேர்?’ என்ற அச்சமும் அவருக்கு இல்லாமல் இல்லை. அதனுல் தான் மயிலை மெதுவாக அருகில் அழைத்து இங்குவா உன்னிடம் இன்னதைச்சொன்னேன் மனதிற் போட்டு வை; மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்பதற் காக. என்று கூறுகிருர், இந்த வரிகளில் உள்ள ஓர் இனிய நயத்தை நீங்கள் உணர வேண்டும். கவிஞர் இந்தக் கருத்தைக் கூறியதுயாரிடம்? பெண் மயிலிடமா? இல்லை. கலாப மயிலிடம். பெண் மயிலிடம் இக்கருத்தைச் சொல்லிஇருந்தால் நிச்சயம் அது கோபங்கொண்டு எங் கள் இனத்தையா குறை கூறுகிறீர்?’ என்று கூறிக் கவிஞரைக் கொத்தியிருக்கும்' என்று கூறினர். கை தட்டலினுல் செயிண்ட் மேரீஸ் ஹாலே அதிர்ந்தது. பாவேந்தர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.