பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


153|முருகுசுந்தரம் பாவேந்தர் பிறகு பேசும் போது இவ்வளவு நயம் இந்தப் பாடலில் இருக்கிறதென்று நான் இப்போது தான் அறிந்து கொண்டேன்' என்று உள்ளம் மகிழ்ந்து திருமதி செளந்தரம் கைலாசத்தைப் பாராட்டினர். பின் தமது பேச்சில் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், அறிஞர் அண்ணுவைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுச் சில கருத்துக்களை வெளியிட்டார். அடுத்தநாள் காலை நான் தி.நகர் இராமன் தெருவில் இருந்த பாவேந்தர் இல்லத்துக்குச் சென்றேன். முதல் நாள் இலக்கிய விழாவில் அவர் வெளியிட்ட சில கருத் துக்களைப் பற்றி அவரிடம் உரையாடினேன். திரு.வி.க வின் கவித்ைய்ாற்றில் பற்றிப் பேச்சு எழுந்தது. அப் போது அவர் கீழ்க்கண்ட கருத்துக்களை வெளியிட்டார். 'திரு.வி.க. சிறந்த தமிழறிஞர். அவர் உரைநடையில் சாதித்ததை இன்னும் எந்தத்தமிழனும் சாதிக்கவில்லை. என்ருலும் அவர் கவிதையின் பக்கம் சென்றிருக்கக் கூடாது. அண்ணுவைப்பற்றி அவர் பாடிய பாடல் கவிதைத் துறையில் அவர் அடைந்த தோல்விக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அண்ணுத் துரையென்னும் அண்ணல் தமிழ்நாட்டின் வண்ணுன் அழுக்கெடுப்பில் வாய்மொழியில் -பண்ணுவான் சிற்பன் எழுத்தோவியத்தில் செவ்வரசு நாவாயின் அற்புதஞ்சூழ் மாலுமியென் ருடு. இந்த வெண்பா அண்ணுவைப் பாராட்டித் திரு.வி.க. எழுதியது. 'வண்ணுன்’ என்ற உவமை, இடத்திற்கும், தகுதிக்கும் ஏற்பப் போடப்பட்ட நாகரிகமான உவமை யன்று. இந்த உவமையால் அண்ணுவுக்கும் பெருமை யில்லை; வண்ணுனுக்கும் பெருமையில்லை. எதுகை சரியாக விழவேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு எந்தச் சொல்லை வேண்டுமானலும் போடக் கூடாது. பொறுமையாகச் சிந்தித்து நல்ல உவமையாகப் போட வேண்டும். திரு. வி.க. கவிஞராக இருந்திருந்தால் இப் பாட்டின் ஆடிகளை அவர் இப்படி அமைத்துப் பாடியிருப்