பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|154 வார்' என்று சொல்லி அவரே ஒரு வெண்பாவை: உடனே சொன்னர். அவர் சொல்லச் சொல்ல எழுதி, அவரிடமே காட்டித் திருத்திக் கொண்ட பாடல் பின் வருமாறு: - எண்ணுத் துறை நாடி ஏந்து புகழ் நட்ட அண்ணுத் துரையண்ணல் ஆய்ந்து தமிழ் செழிக்கப் பண்ணுத் துறையுண்டோ? பைந்தமிழர் ஏனிவனைக் கண்ணுகக் கொள்ளார் கனிந்து? மேலும் அவர் தொடர்ந்து வகையுளியை எவன் சரி? வர உணர்ந்து யாப்பில் கையாளுகின்ருனே, அவனே கவிதையில் வெற்றி பெறுவான். ஒவ்வொரு சீரும் சொற்கள் உடை படாமல் கருத்து முற்றி நிற்கும் படி: வண்ணம் அறுக்க வேண்டும். அத்தகைய கவிதை தான் வடிப்பவர் நெஞ்சில் நிற்கும்.இராம்லிங்க அடிகள் இதில்: வல்லவர். ; கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர் தருவே! களிப்பருளுங் களிப்பே' நலங் கொடுக்கும் நலமே! பாட்டு என்ருல் இப்படி இருக்கவேண்டும்" என்று சொன்னர். . பிறகு கொஞ்சநேரம் ஏதோ சிந்தித்து விட்டு, நீ ஒட்டக்கூத்தன் வாட்டு படிச்சிருக்கறயா?" என்று கேட்டிார். "தனிப்பாடல் திரட்டில் சில பாடல்கள் படித்திருக் கிறேன்’ என்று நான் சொன்னேன். 'நான் சுப்பிரமணியர் துதியமுது எழுதிய காலத்திலே ஒட்டக்கூத்தன் பாட்டைச் சந்தத்துக்காக விரும்பிப் படிப்பதுண்டு........இதைக்கேளு. ’’ என்று சொல்லிக்

  • வகையுளி-முன்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புக்கள் நிற்புழியறிந்து, குற்றப்படாமல் வண்ணம் அறுத்தல்.

-யாப்பருங்கலக் காரிகை.