பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|156 மிக்க சூழலில் அவர் வளமனை அமைந்திருந்தது. சுய மரியாதைக் கட்சித்தலைவர்களும், தமிழறிஞர்களும் அவரைப்பார்க்க அவ்விடத்துக்கு அடிக்கடிவருவதுண்டு. பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பாவேந்தர், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கள். பட்டுக்கோட்டை அழகிரிசாமி பி.ஆர்.பிக்குமிகவும் வேண்டியவர். சேலம் வரும் போதெல்லாம் அழகிரி சாமிக்கு இவர் தாராளமாகப் பொருளுதவி செய்து வந்தார். நான் ஒரு முறை பி.ஆர்.பியை, என் தம்பி முருகரத்த னத்தின் அலுவல்தொடர்பாகக் காண்பதற்கு மாமாங்கம் சென்றிருந்தேன். அப்போது பாவேந்தரைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்னர்: 'பாரதிதாசன் சேலம் வந்தா வீட்டுக்கு வருவார். பயில்வான் மாதிரி இருப்பார். ஏதாவது கேட்டா ஆ...ாங்... என்று குரல் கொடுத்து விட்டு நம்மைப் பார்ப்பார். அவர்கிட்டப் பேச நானே பயப்படுவ. என் மகளுக்குத் திருமணம். பெரியார் முதல் பல அரசியல் தலைவர்களும் வந்திருந்தாங்க. பாவேந்தரும் வந்து வாழ்த்துரை வழங்கினர். திருமணம் முடிஞ்சு ஊருக்கு அவர் புறப்பட்டப்ப ஒரு நூறுருபா நோட்டைக் கவர்லே போட்டுக் கொடுத்தேன். என்ன ரத்தனசாமி! நான் உங்க குடும்பத்தில் ஒருவன் இல்லையா? நம்ம வீட்டுத் திருமணம்!’ என்று சொல்லி வாங்க மறுத்து விட்டார்’’ -என்று குறிப்பிட்டார். 门 பெரியார் மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் என் நண்பர் வெங்கிடு ஆண்டுதோறும் செப்டம்பர் திங்களில் அண்ணுபிறந்தநாள் விழாவைச்சிறப்பாகக் கொண்டாடு வார். இரண்டுநாட்கள் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமண்டபம் என்று கோபியே அமர்க்களப்படும். அப் போது வழக்கமாகக் கூடும் நண்பர்களுள் இப்போது. அரசவைக் கவிஞராக இருக்கும்புலவர்,புலமைப்பித்தன், புலவர் பொன்னி வள்வன், கவிஞர் குடியரசு, ஈரோடு நகைச்சுவை அரசு ஆறுமுகனர், புலவர் எழில்வேலன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புலவர் புலமைப்