பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157/முருகுசுந்தரம் பித்தனுக்குக் கோபி மாமியார் வீடு: எங்கள் தேவைகளை அவர்தாம் கவனித்துக் கொள்வார்.விளையாட்டுப்பேச்சும். வேடிக்கையுமாக இரண்டுநாட்களும் போவது தெரி աT51 வழக்கமாகக் கோபி விழாவின் போது அங்கிருக்கும் பொதுப்பணித்துறைப்பயணியர் விடுதி நாங்கள் தங்கு வதற்கு ஏற்ப்ாடு செய்யப்படும். அப்போது பெரியவர் கோபி ராஜூ அங்கு நாள்தோறும் குதிரை வண்டியில் வருவார். பொதுப்பின்னித்துறை விடுதியில் தங்கி நாள் தோறும் தம்மைத் தேடிவரும் கட்சிக்காரர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார். அப்போது அவர் தி.மு.க மேல் சபை உறுப்பினர் (எம்.எல்.சி) . கோபி ராஜூக்கு அப்போது வயது எழுபதுக்குப் பக்க மாக இருக்கும். கருத்ததோற்றம். தடித்த உருவம், கண் பார்வை சற்று மந்தமாக இருக்கும். பட்டுக்கோட்டை அழகிரி சாமி, பூவாளுர் பொன்னம்பலஞர் போன்ற பழைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களின் வரிசை யைச் சேர்ந்தவர். அந்த வயதிலும் மேடையேறினல் அஞ்சாமையோடு மேடையே அதிரும்படி பேசுவார். கல்லெறிக்கு அஞ்சாமல், குத்துவாளை எடுத்து மேடை மீது ப்ோட்டுவிட்டுச்சுயமரியாதைக் கூட்டங்களில் பேசிப் பழக்கப்பட்டவர். சுயமரியாதை இயக்கத்தோடு ஒன்றி வளர்ந்தவர். விடுதிக்கு வரும்போதெல்லாம் சுயமரி யாதை இயக்கத்தின் பழைய செய்திகளை எங்களுக்கு எடுத்துரைப்பார், நாங்கள் ஆர்வத்தோடு கேட்போம். ஒருநாள் பாவேந்தரோடு நீங்கள் பழகிஇருக்கின்றீரா?” என்று.நான் அவரைக் கேட்டேன். 'நன்ருகப் பழகியிருக்கிறேன். இந்தப்பக்கம் கூட்டங் களுக்கு வரும்போது நான் அவரைச்சந்தித்துப் பேசிய துண்டு. புதுச்சேரிப்பக்கம் கூட்டத்துக்குச் சென்ருல் நானும் அவரை வீட்டில் சென்று பார்ப்பதுண்டு. பாரதி தாசனிடத்தில் உள்ள முக்கிய குணம் அஞ்சாமைதான். அவர் நின்றுகொண்டிருந்தாலும். உட்கார்ந்துகொண் டிருந்தாலும் நிமிர்ந்த நிலையில்தான் காட்சியளிப்பார். "ஒருமுறை நான்புதுச்சேரியில் அவர் வீட்டில் சாப்பிட்டு