பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|158 விட்டு அவரோடு கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டி ருந்தேன். அப்போது அவர்மகன் கோபதி கல்லூரிக்குப் புறப்பட்டுப் பேர்ய்க் கொண்டிருந்தான். நாங்கள் உட் கார்ந்து பேசிக் கொண்டிருந்ததால் கையில் புத்தகக் கட்டோடு, அடக்கமாகக் குனிந்த தலையோடு அவன் சென்று கொண்டிருந்தான். பாரதிதாசன் டேய்! கோ பதி! இங்கவா!' என்று அவனைக்கூப்பிட்டார். அவனும் வந்தான் தலையைக்குனியாதே! நிமிர்ந்து நட! என்று கட்டளையிட்டார். அப்போது நிமிர்ந்த கோபதியின் தலை மறுபடி குனிந்ததில்லை!" என்றுசொன்னர் கோபி ராஜூ: Q திருச்செங்கோடு மாவட்டக் கழக உயர் நிலைப்பள்ளியில் 1944-45 இல் நான் மாணவன். திருவாளர் சேஷகிரி ராவ் பி.ஏ.எல்.டி பள்ளித்தலைமையாசிரியர், திராவிடர்க் கழகம் அப்போது வளர்ந்து கொண்டிருந்த நேரம். திரா விடநாட்டையும், குடியரசு வார இதழையும் டெஸ்க்குக் குள் மறைத்துப்படித்துக் கொண்டிருப்போம். அப்போது நானும் என் நண்பர்கள் சிலரும் துணிந்து கருப்புச் சட்டை போட்டுக் கொண்டுபோவோம். அவர்களுள் நெய்க்கார பட்டி நடேசனும், சண்முக சுந்தரமும் (திருவள்ளுவர் டெக்ஸ்டைல்ஸ், ஈரோடு) குறிப்பிடத் தக்கவர்கள். ஒய்வு நேரத்தில் எங்களுக்குப் பாசறையாக விளங்கியது திருவாளர் N.K.P.வேலு அவர்களின் வீடு. அவர்! சாய மருந்துக் கடை வைத்திருந்தார். அண்ணு முதல் தி.க. தலைவர்கள் எல்லாரும் அங்கு தான் வந்துதங்குவார்கள்; திருவேலு இறுதிக்காலத்தில்,மிகவும் நொடித்துப்போய் வறுமை வாய்ப்பட்டு இறந்தார். பாரதிதாசன் திருச் செங்கோடு வந்தபோது'வேலுவின் வீட்டில் தான் தங்கி யிருந்தார். அப்போது பாவேந்தரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. - ஒரு முறை பாரதிதாசனைப் பற்றி நான் வேலுவைக் கேட்டபோது அவர் கூறிய செய்திக்ள். f செல்வம் டர்க்கிரெட் ஆயில் கம்பெனி, செல்வம்' பழைய ஜஸ்டிஸ் கட்சி வீரர். திரு. பன்னீர்ச்செல்வத் தைக்குறிப்பிடும்